Friday, November 29, 2024
Homeசிறுவர் செய்திகள்வெடிகுண்டு தாக்குதல் 100 பேர் உடல் சிதைந்து பலி Car Bomb Blast 100 Died

வெடிகுண்டு தாக்குதல் 100 பேர் உடல் சிதைந்து பலி Car Bomb Blast 100 Died

- Advertisement -

Car Bomb Blast 100 Died  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

சோமாலியா தலைநகரில் நடந்த இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் 100 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 300 மேற்பட்டோர் படுகாயமடைந்தாக தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் செயல்பட்டு வரும் அல்ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு அரசை கவிழ்க்க முயற்சித்து வருகிறது

- Advertisement -

அல்கொய்தாவுடன் தொடர்புடைய இந்த பயங்கரவாத அமைப்பு, சோமாலியா மக்கள் மற்றும் ராணுவத்தை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.

- Advertisement -
Car Bomb Blast 100 Died  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Car Bomb Blast 100 Died  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

 

இந்நிலையில், தலைநகர் மொகாடிஷுவில் உள்ள அரசு தலைமை அலுவலகத்தில் நேற்று அடுத்தடுத்து இரண்டு கார் வெடிகுண்டுகள் வெடித்தன.

இந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலில் 100 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 300க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

இதனை சோமாலியாவில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ஹசன் ஷேக் முகமது இன்று அதிகாலை வெளியிட்ட அறிக்கையில் உறுதிபடுத்தினார்.

இதற்கு முன்னர் தலைநகர் மொகாடிஷுவில் 2017இல் நடந்த லாரி வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 500 பேர் கொல்லப்பட்டனர்.

அந்த சம்பவத்திற்கு பின் நடைபெறும் மிகக்கொடூர குண்டுவெடிப்பு சம்பவமாக இது அமைந்துள்ளது.

இந்த கொடூர தாக்குதலுக்கு அல்ஷபாப் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் தற்கொலை படை போல் செயல்பட்டு இருக்கலாம் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Kidhours – Car Bomb Blast 100 Died

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

 

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.