UK New Prime Minister சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பிரிட்டனின் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்(Rishi Sunak) வரும் 28ம் திகதி பதவி ஏற்க உள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரிட்டன் பிரதமர் பதவியிலிருந்து போரிஸ் ஜான்ஸன் விலகினார். இதையடுத்து புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க நடந்த தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியைச்
சேர்ந்தவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான ரிஷி சுனக்(Rishi Sunak), வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது.
இதில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் ரிஷி சுனக்(Rishi Sunak), லிஸ் டிரஸிடம் தோல்வி அடைந்தார். பிரிட்டனின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற லிஸ் டிரஸ்(Liz truss) 45 நாட்களில் பதவியிலிருந்து விலகினார்.
இதையடுத்து, அடுத்தபிரதமர் தேர்வுக்கு ரிஷி சுனக்,(Rishi Sunak) பென்னி மோர்டன்ட் இடையே நடந்த போட்டியிலும் மோர்டன்ட் விலகினார். இதையடுத்து, பிரிட்டனின் பிரதமராக முதல்முறையாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பொறுப்பேற்க உள்ளார்.
பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டபின் ரிஷி சுனக்(Rishi Sunak) பேசுகையில் “நான் உங்களுக்கு நேர்மையுடனும், பணிவுடனும் பணியாற்றுவேன் என உறுதியளிக்கிறேன்.
நான் பிரதமராக பதவிஏற்றதிலிருந்து, பதவியிலிருந்து விலகும்வரை பிரிட்டன் மக்களுக்காக பணியாற்றுவேன்.
எனக்கு ஆதரவாக இருந்து என்னை கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் தேர்ந்தெடுத்த நாடாளுமன்றத்தின் சக தோழர்களுக்கு நான் நன்றியும், மரியாதையும் செலுத்துகிறேன்.
என் வாழ்க்கையின் சிறந்த தருணமாக இருக்கும், இதற்கு நன்றி செலுத்துகிறேன். பிரிட்டன் மிகப்பெரிய தேசம், நாம் பொருளாதாரச் சிக்கலை எதிர்நோக்கி வருகிறோம்.
இந்த நேரத்தில் நாம் உறுதியாகவும், நிலையாக இருப்பது அவசியம். தேசத்தையும், கட்சியையும் உயர்வுக்கு கொண்டுவருவதே என்னுடைய முன்னுரிமை,சவால்களை கடந்து வெல்வதற்கும்,
குழந்தைகளின் எதிர்காலத்துக்கும் இதுதான் ஒரேவழி” எனத் தெரிவித்துள்ளார் பிரிட்டனின் பிரதமராக வரும் 28ம் திகதி ரிஷி சுனக்(Rishi Sunak) பொறுப்பேற்க உள்ளார்.
29ம் திகதி புதிய அமைச்சரவை பொறுப்பேற்கும் எனத் தெரிகிறது. பிரிட்டன் வரலாற்றில் முதல்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக வரஉள்ளார்.
அதுமட்டுமல்லாமல் 200 ஆண்டுகளில் பிரிட்டன் பிரதமராக 42 வயதில் ஒருவர் பதவி ஏற்பது இதுதான் முதல்முறையாகும்.
Kidhours – UK New Prime Minister
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.