China New President சிறுவர்களுக்கான உலக செய்திகள்
சீனாவில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்குழு மாநாட்டில் அதிபர் ஜி ஜின்பிங் – யை மீண்டும் அதிபராகத் தேர்வு செய்துள்ளனர்.
சீனா அரசியல் அமைப்பு படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் கூடி பொதுக்குழு மூலம் நாட்டின் அதிபரைத் தேர்ந்தெடுப்பர்.
அந்த வகையில் அதிபர் ஜி ஜின்பிங் பதவி காலம் முடிவடைந்த நிலையில் சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்குழு மாநாடு கடந்த 16ம் தேதி தொடங்கியது.
தற்போது மாநாடு முடிவடைந்த நிலையில் அதிபர் ஜி ஜின்பிங் மூன்றாம் முறை சீனாவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சீனா அரசியல் வரலாற்றில் சீனாவைக் குடியரசு நாடாக மாற்றி மாபெரும் தலைவராக ஆட்சி அமைத்த மாவோவிற்கு பின்பு, அதிபர் ஜி ஜின்பிங் பெரிய சக்திவாய்ந்த தலைவராக உருவெடுத்துள்ளார்.
இதற்குப் பின் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த நிலையில் அதிபர் ஜி ஜின்பிங் மீண்டும் 5 ஆண்டுகள் ஆட்சியை அமைத்துள்ளார்.
அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் நிகழ்ச்சியில் பேசிய ஜி ஜின்பிங், கட்சித் தலைவர்களுக்கும் நாட்டு மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார்.
மேலும் உலகத்திற்குச் சீனா தேவை என்றும் சீனாவின் முன்னேற்றத்திற்கு உலக தேவை என்றும் கூறியுள்ளார்.
69 வயதான அதிபர் ஜி ஜின்பிங் மேலும் 5 ஆண்டுகள் சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும், நாட்டின் அதிபராகவும் மற்றும் ராணுவத்தின் தலைவராகவும் பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
kidhours – China New President
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.