Thursday, January 23, 2025
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புஇன்று உலக உணவு தினம் - அக்டோபர் 16 # World Food Day October...

இன்று உலக உணவு தினம் – அக்டோபர் 16 # World Food Day October 16

- Advertisement -

World Food Day in Tamil  பொது அறிவு  செய்திகள்

- Advertisement -

முன்னெப்போதும் நிகழ்ந்திராத அளவுக்கு உணவுப் பாதுகாப்பு சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், உலக அளவில் உணவுப் பொருட்களின் விலைகள் பெருமளவு அதிகரிக்கும் என்ற ஐ.நா எச்சரிக்கைக்கு நடுவே உலக உணவு தினம் (அக்டோபர் 16) கடைபிடிக்கப்படுகிறது.

“எத்தியோப்பியா, மடகாஸ்கர், தெற்கு சூடான், ஏமன் ஆகிய நாடுகளில் கிட்டத்தட்ட அரை மில்லியன் மக்கள் பஞ்சம் போன்ற பிரச்னைகளை அனுபவித்து வருகின்றனர்.

- Advertisement -

கடந்த சில மாதங்களில், புர்கினோ ஃபாசோ, நைஜீரியாவில் சமூகரீதியாக எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கும் மக்களும் இதே பிரச்னைகளுக்கு உட்பட்டுள்ளனர்,” என்கிறது ஐ.நா சபை.

- Advertisement -

கடும் பஞ்சத்தால் பாதிக்கப்படும் அபாயத்திலுள்ள நாடுகளில் வாழும் 4.1 கோடி மக்களுக்கு ஆதரவளிக்க உடனடியாக நிதியுதவி செய்யுமாறு ஐ.நா அழைப்பு விடுத்துள்ளது.

பிரிட்டனை தளமாகக் கொண்ட தன்னார்வ நிறுவனமான தி ஹங்கர் ப்ராஜெக்ட்டின் தரவுகளின்படி, உலகளவில் 690 மில்லியன் மக்கள் நாள்பட்ட பட்டினியோடு வாழ்கின்றனர்.

அந்த 690 மில்லியனில் (69 கோடி) 60% பேர் பெண்கள். 850 மில்லியன் பேர் கோவிட்-19 பேரிடர் காரணமாக வறுமைக்குள் தள்ளப்படும் அபாய நிலையில் உள்ளனர்.

World Food Day in Tamil  பொது அறிவு  செய்திகள்
World Food Day in Tamil  பொது அறிவு  செய்திகள்

உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு நடைமுறையில் அதிகரித்துள்ள உணவு விலைகள் எதைக் குறிக்கின்றன, உணவு வறுமையைச் சரிக்கட்ட மாற்று வழிகள் என்ன என்பதை இங்கு பார்ப்போம். ஆனால், முதலில் உணவுப் பொருட்களின் விலை ஏன் உயர்கிறது என்பதைப் புரிந்துகொள்வோம்.

சர்வதேச உணவு நிறுவனமான கிராஃப்ட் ஹெய்ன்ஸ், தொற்றுநோய்க்குப் பிந்தைய “பணவீக்கத்தின்” விளைவாக மக்கள் “உணவு விலைகள் அதிகமாவதற்குப் பழகிக் கொள்ள வேண்டியிருக்கும்” என்று எச்சரித்துள்ளது.

உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அக்டோபர் 16ம் தேதி உலக உணவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 1979ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் மூலம் இந்த தினம் அறிவிக்கப்பட்டது. உயிர் வாழ உணவு அவசியம்.

அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. இது மனித உரிமையும் கூட. இன்றைய நிலையில் பசியால் யாரும் வாடக் கூடாது, அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உலக உணவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

அத்துடன் உணவு தொடர்பான பிரச்னையில் மக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், உலக அளவில் வறுமையை ஒழிப்பதும் இந்தத் தினத்தின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. உணவில் மாவு, புரதம், தாது, கொழுப்பு, உயிர் சத்து (விட்டமின்) போன்றவை கலந்து இருப்பதே சரிவிகித உணவாகும்.

உயிர் சத்தும் தாது உப்புகளும் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

உலகில் அதிகரிக்கும் மக்கள் தொகை பெருக்கத்தால், வறுமையும் அதிகரிக்கிறது.அடுத்த வேலை உணவு கிடைக்குமா என்ற ஏக்கத்தில் இருப்பவர்களும், உலகில் இருக்கத்தான் செய்கின்றனர்.

மக்கள் தொகை வளர்ச்சியை ஒப்பிடும்போது, உணவுப் பொருட்களின் உற்பத்தி குறைவாகவே உள்ளது.

உலக வங்கி தகவல்படி 2010& 11ம் ஆண்டில் உணவுப் பொருட்களின் விலை உயர்வால் சுமார் 7 கோடி பேர் வறுமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். வளரும் நாடுகளில் நிலவும் விலைவாசி காரணமாக உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

மக்கள் தொகை பெருக்கம், உற்பத்தி குறைவு போன்றவை, விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கின்றன. ஏழைகளுக்கு 3 வேளை உணவு என்பது எட்டாக்கனியாக இருக்கிறது.

எனவே சமச்சீரான வளர்ச்சியை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும். எதிர் காலங்களில் பட்டினியால் சாவு என்பதை தவிர்க்க உறுதிமொழி ஏற்க வேண்டும்.

 

Kidhours – World Food Day In Tamil , World Food Day –Healthy ,World Food Day October 16, World Food Day 2022

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு  செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.