Parade of Dogs for Queen Elizabeth சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பிரிட்டனின் மறைந்த எலிசபெத் அரசியாரைக் கௌரவிக்க நேற்று (9 அக்டோபர்) Corgi வகை நாய்களின் உரிமையாளர்கள் அவர்களின் நாய்களுடன் பக்கிங்ஹம் அரண்மனையில் கூடியிருந்தனர்.
எலிசபெத் அரசியார் செல்லமாக அந்த வகை நாய்களை வளர்த்துவந்தார். அவர் தமது வாழ்நாளில் சுமார் 30 corgi வகை நாய்களை வளர்த்திருந்தார். அதன் காரணமாக அது அரச குடும்பத்தின் செல்லப் பிராணி எனும் தனி இடத்தைப் பிடித்தது.
1933ஆம் ஆண்டில் எலிசபெத் அரசியாரின் தந்தை மன்னர் ஆறாம் ஜார்ஜ் (King George VI) அரண்மனைக்கு Corgi நாய் ஒன்றை அழைத்துச் சென்றிருந்தார்.
Corgi நாய்கள் மீது எலிசபெத் அரசியார் வைத்திருந்த பிரியம் அன்று ஆரம்பமானதாக நம்பப்படுகிறது.
அவரது 70 ஆண்டு ஆட்சியின்போது, Corgi நாய்கள் அவருக்குத் துணையாய் இருந்ததாகக் கூறப்பட்டது.
Kidhours – Parade of Dogs for Queen Elizabeth
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.