Air Pollution Affects in Tamil புவியியல்
காற்று மாசுபாட்டின் விளைவாக கருப்பைக்குள் கருப்பு கார்பன் துகள்கள் சென்று சேரலாம் என்றும், இது முதல் மூன்று மாதத்தில் காணப்படும் என்றும் புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.
இதனால் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவும் கர்ப்பப்பையும் பாதிக்கப்பட அதிக வாய்ப்பிருப்பதாக புதிய ஆராய்ச்சியில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குறிப்பாக கருப்பு கார்பன் துகள்கள் கருப்பைக்குள் காணப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
பெல்ஜியம் மற்றும் பிரிட்டன் பல்கலைக்கழகங்கள் இணைந்து முன்னெடுக்கப்பட்ட இந்த முக்கிய ஆய்வில், 60 கர்ப்பிணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், பிறந்து நான்கு வாரங்களேயான சிசுக்களையும் ஆய்வுக்கு உட்படுத்தினர்.
அந்த ஆய்விலேயே அதிரவைக்கும் முடிவுகள் வெளியானது. அவர்கள் கண்டுபிடித்தது என்னவென்றால், தண்டு இரத்தத்தில் கருப்பு கார்பன் துகள்கள் இருந்தன, இது ஒரு குழந்தை பிறந்த பிறகு நஞ்சுக்கொடி மற்றும் தொப்புள் கொடியில் இருக்கும் இரத்தமாகும்.
கார்பன் நானோ துகள்கள் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களிலேயே கருப்பையில் உள்ள கருவுக்குள் நஞ்சுக்கொடியை கடக்க முடியும் என்பதை இந்த ஆராய்ச்சி முதலில் கண்டறிந்தது.
மேலும், முதல் மூன்று மாதங்களில் கல்லீரல், நுரையீரல் மற்றும் மூளை போன்றவை உருவாகும் நிலையில் இந்த கார்பன் துகள்கள் பாதிப்பை ஏற்படுத்தும் என்றே அஞ்சப்படுகிறது.
Kidhours – Air Pollution Affects in Tamil
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.