Awesome Deseret சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஆப்பிரிக்க பாலைவனத்தில் மர்மமான முறையில் திடீரென்று தோன்றிய வட்டம் தொடர்பில் மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இயற்கையின் விசித்திரமான செயல்கள் எப்போதும் விடை தெரியாத மர்மமாகவே இருந்து வந்துள்ளது. புற்கள் மிகுந்த நிலப்பரப்பில் திடீரென்று தோன்றும் மர்ம வட்டங்களுக்கு இதுவரை அறிவியல் ரீதியான விளக்கமில்லை.
ஆனால் வேற்றுகிரகவாசிகளின் செயலாக இருக்கலாம் என்ற கருத்தில் மக்கள் நம்பிக்கை வைக்கும் நிலைக்கு இதனால் தள்ளப்பட்டுள்ளனர்.
அவ்வாறான ஒரு புல்வெளி தற்போது தென்னாப்பிரிக்கா, நமீபியா மற்றும் அங்கோலா மட்டுமின்றி மேற்கு ஆஸ்திரேலியாவிலும் காணப்பட்டுள்ளது.
நமீபியாவில் பொதுவாக இதுபோன்ற மர்ம வட்டங்கள் காணப்படுவதாக கூறப்படும் நிலையில், அவர்களின் கடவுளான முக்குருவின் கால்தடங்கள் என அங்குள்ள பூர்வகுடி மக்கல் வாதிட்டு வருகின்றனர்.
ஆனால், நிலத்திலிருந்து நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை அறுவடை செய்வதற்காக இந்த வட்டங்கள் கரையான்களால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் முன்பு தெரிவித்திருந்தனர்.
மட்டுமின்றி, புற்களே இது போன்ற வட்டங்களை உருவாக்கியிருக்கலாம் என்ற கருத்தையும் விஞ்ஞானிகள் முன்வைக்கின்றனர்.
இருப்பினும், பொதுமக்கள் நம்பும்படியாக அல்லது தெளிவாக புரிந்துகொள்ளும் வகையில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
KIdhours – Awesome Deseret
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.