Nobel Prize 2022 for Chemistry சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உலக அளவில் உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச அளவில் சிறப்பான பங்களிப்பை அளிக்கும் நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
ஸவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள ராயல் சுவிடிஸ் அகாடமி ஆண்டுதோறும் வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பரிசுகளை வழங்கி வருகிறது.
2022 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு துறைவாரியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் நேற்று முன்தினம் (அக். 3) மருத்துவத்துக்கான பரிசு அறிவிக்கப்பட்டது.
அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக, சுவீடன் நாட்டைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளரான ஸ்வாண்டே பாபோவிற்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, இயற்பியலுக்கான நோபல் பரிசு (அக்.4) நேற்று அறிவிக்கப்பட்டது..
பிரான்ஸை சேர்ந்த அலைன் ஆஸ்பெக்ட், அமெரிக்காவின் ஜான் எஃப். கிளாசர், ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த அன்டன் ஜீலிங்கர் ஆகிய விஞ்ஞானிகள் நிகழாண்டுக்கான நோபல் பரிசுக்கு கூட்டாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
குவாண்டம் தகவல் தொழில்நுட்ப அறிவியல் குறித்து இவர்கள் மேற்கொண்ட அற்புதமான ஆராய்ச்சிகளுக்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.
இந்த நிலையில், வேதியியல் துறைக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த கரோலின் பெர்டோஸி,பேரி ஷார்ப்லெஸ், டென்மார்க்கை சேர்ந்த மோர்டன் மெல்டல் ஆகிய மூன்று விஞ்ஞானிகள் நோபல் பரிசுக்கு கூட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மூலக்கூறுகள் ஒருகிணைப்பு மற்றும் உயிரிக்க வேதியியல் வளர்ச்சி குறித்து ஆராய்ச்சிக்காக இவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்பட உள்ளது.
ஸவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள ராயல் சுவிடிஸ் அகாடமி ஆண்டுதோறும் வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பரிசுகளை வழங்கி வருகிறது.
Kidhours – Nobel Prize 2022 for Chemistry
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.