Hindu Kovil in Dubai சிறுவர்களுக்கான உலக செய்திகள்
துபாயில் கட்டப்பட்டுள்ள இந்து கோவிலில் அனைத்து மாதத்தினருக்கும் அனுமதி உண்டு என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிந்தி குரு தர்பார் கோவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மிகப்பழைமான இந்து கோவில் ஆகும்.
இதனையடுத்து இந்த கோவிலின் விரிவாக்க வேலைகள் கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று அனைத்து பணிகளும் நிறைவடைந்தன.
துபாயில் உள்ள ஜெபல் அலி பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த இந்து கோவில் நேற்று மாலை 5:30 மணிக்கு திறக்கப்பட்டது.
ஜெபல் அலி பகுதியில் பல தேவாலயங்கள் மற்றும் சீக்கிய குருத்வாரா உள்ள நிலையில், துபாயின் புதிய இந்து கோவில் அமைக்கப்பட்டிருப்பதன் மூலம் துபாயில் வசிக்கும் இந்து மதத்தினரின் பல ஆண்டு கனவு நிறைவேறியுள்ளது.
இந்த நிலையில் இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்காக இந்து கோவில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கோவிலுக்கு அனைத்து மதத்தினருக்கும் கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது .அதன் அடிப்படையில் சுமார் 1000 முதல் 1200 பக்தர்கள் வழிபாடு செய்யலாம்.
துபாயின் புதிய இந்து கோவில் காலை 6:30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். கூட்ட நெரிசலை தவிர்க்க பார்வையாளர்களுக்கு கோவில் நிர்வாகம் கியூஆர் குறியீடு அடிப்படையிலான முன்பதிவு முறையை செயல்படுத்தியுள்ளது.
Kidhours – Hindu Kovil in Dubai
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.