Agree Against to China சிறுவர்களுக்கான உலக செய்திகள்
சீனா, உலகின் சக்திவாய்ந்த நாடாக மாற வேண்டும் என்று தொடர்ந்து எடுக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து,
உலகின் முக்கிய நாடுகளான அமெரிக்க, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் இணைந்து ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க அங்கீகரித்துள்ளனர்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின் கூறுகையில், ’தைவான் மேல் சீனா நடத்தும் அத்துமீறல்களும் ராணுவ நடவடிக்கைகளும் கவலைக்குரியதாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் அதனை எதிர்கொள்ள ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் நாடுகளுடன் இணைந்து ராணுவ பலத்தைப் பசிபிக் பகுதியில் மேம்படுத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
Excellent trilateral discussion on our efforts to deepen defense integration with my counterparts from 🇦🇺 Australia & 🇯🇵 Japan – Minister @RichardMarlesMP & Minister of Defense Hamada Yasukazu. For decades, our three democracies have worked together for a #FreeAndOpenIndoPacific. pic.twitter.com/cFjV8EJ68o
— Secretary of Defense Lloyd J. Austin III (@SecDef) October 1, 2022
அமெரிக்க, சீனாவின் அதிகரிக்கும் செயல்பாடுகளைத் தடுப்பதற்காகப் பசிபிக் பகுதியில் இருக்கும் நாடுகளுடன் இணைந்து நட்புணர்வை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் பசிபிக் பகுதியில் உள்ள தீவு நாடுகளுடன் உறவை மேம்படுத்த அமெரிக்கா கடந்த வியாழக்கிழமை அன்று 810 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவியை அளித்துள்ளனர்.
அதே நேரம், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் கடந்த வாரம் தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Kidhours – Agree Against to China
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.