Spreading Pandemic சிறுவர்களுக்கான உலக செய்திகள்
குரங்கில் காணப்படும் ஒருவகை ஆபத்தான கிருமி மனிதர்களிடம் பரவ அதிக வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்கனவே ஆப்பிரிக்காவில் முடிவுக்கு வந்த Simian hemorrhagic காய்ச்சலானது தற்போது சில இனம் குரங்குகளில் காணப்படுவதாகவும்,
இதுவே, எதிர்காலத்தில் ஆபத்தான குரங்கம்மை அல்லது HIV என உருமாற்றம் பெறலாம் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இருப்பினும், இதுவரை அவ்வாறாக பாதிக்கப்பட்டது தொடர்பில் எந்த தகவலும் இதுவரை இல்லை என்றே தெரியவந்துள்ளது.
குரங்கில் தற்போது காணப்படும் புதிய வைரஸானது, மனிதர்களுக்கு பரவியதும் அது பலமடங்காக பெருகும் எனவும், இதானல் ஆபத்தும் அதிகம் என கூறுகின்றனர்.
இது தொடர்பில் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
குறித்த வைரஸால் பாதிக்கப்பட்டால், ரத்தக்கசிவு மற்றும் காச்சல் இருக்கும் எனவும் எபோலா தொற்றால் பாதிக்கப்பட்டால் காணப்படும் அறிகுறிகள் தென்படும் எனவும் விளக்கமளித்துள்ளனர்.
HIV என அடையாளப்படுத்துவதற்கு முன்னர் 1884ல் இருந்து 1924 வரையில் ஆப்பிரிக்க குரங்குகளில் SIV என்ற வைரஸ் பரவலாக காணப்பட்டுள்ளது.
அதன் பின்னர் குறித்த வைரஸ் மனிதர்களுக்கு பரவி ஆபத்தான HIV என அறியப்பட்டதுடன், 2022 வரையில் உலகமெங்கும் 40 மில்லியன் மக்கள் இதனால் மரணமடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Kidhours – Spreading Pandemic
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.