Thursday, October 31, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புஉலக விலங்குகள் தினம் அக்டோபர் 4 World Animal Day October 4

உலக விலங்குகள் தினம் அக்டோபர் 4 World Animal Day October 4

- Advertisement -

World Animal Day October 4 உலக விலங்குகள் தினம் அக்டோபர் 4

- Advertisement -

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 4 அன்று உலக விலங்குகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

World Animal Day October 4 உலக விலங்குகள் தினம் அக்டோபர் 4
World Animal Day October 4 உலக விலங்குகள் தினம் அக்டோபர் 4

இந்த சர்வதேச நிகழ்வு விலங்குகளின் நலனை உறுதி செய்வதையும், இயற்கையில் அவற்றின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

- Advertisement -

இந்த தினம் உலக விலங்கு காதலர்கள் தினம் என்றும் அழைக்கப்படுகிறது.

- Advertisement -

உலகம் முழுவதுமுள்ள விலங்குகளின் மதிப்பை உயர்த்துவதன் மூலம் விலங்குகளின் நலத்தையும் , தரத்தையும் மேம்படுத்த ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 4 – ம் நாள் அனைத்துலக விலங்குகள் தினம் ( WAD — World animal day ) அனுசரிக்கப் படுகிறது.

இத்தாலி நாட்டின் இயற்கை நேசர் மற்றும் வனவிலங்கு பாதுகாவலர் ” பிரான்சிஸ் அசசி ” என்பவரின் நினைவுதினத்தைக் கொண்டாடும் வகையில் உலக வன விலங்குகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

முதன் முதலாக 1931 – ஆம் ஆண்டு இத்தாலியின் ” புளோரன்ஸ் ” நகரில் வனவிலங்கு தினம் கடைபிடிக்கப்பட்டது. அதன் பின்னரே விலங்கு தினம் உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அழிந்து வரும் வனவிலங்குகளைப் பாதுகாக்கவும், அந்தப் பாதுகாப்பை உறுதிசெய்யவும் உலக விலங்கு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது . உலகின் வனப்பகுதிகளை நவீனமாக்கலின் விளைவாக அவை அழிக்கப்பட்டு விடுகின்றன.

இதனால் வனப்பரப்பு குறைந்து, வனத்தில் வாழும் உயிரின எண்ணிக்கையும் குறைகிறது. இந்தப் பாதிப்பால் சுற்றுச் சூழல் சங்கிலி அறுபட்டு , இயற்கைக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது .

உலக விலங்கு தினத்தை ” சைனாலஜிட் ஹென்ரிச் ஜிம்மர் மேன்” என்பவர் உருவாக்கினார்.

முதன் முதலாக விலங்கு தினத்தை 1925 – ம் ஆண்டு மார்ச் – 24 – ம் நாள் ஜெர்மனியின் பெர்லினில் உள்ள அரண்மனை விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்தார். இவ்விழா நிகழ்வில் 500 — க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சுற்றுச் சூழல் நிகழ்ச்சியின் புரவலர் புனித அசசியின், புனித பிரான்சியின் பண்டிகை நாளோடு இணைவதற்காக இந்த நிகழ்வு முதலில் அக்டோபர் 4 -ம் தேதி திட்டமிடப்பட்டது.

அதன்பின் அக்டோபர் 4 – ம் தேதி முதன் முறையாக 1929 — ம் ஆண்டு தொடங்கி ஜெர்மன் ஆஸ்திராயா சுவிட்சர்லாந்து செக்கோஸ்லோவாவியா உள்ளிட்ட நாடுகளில் கொண்டாடபட்டது.

ஜிம்மர்மேன் ஒவ்வொரு ஆண்டும் உலக வனவிலங்கு தினத்தை மேம்படுத்துவதில் ஆர்வம் கொண்டு அயராது உழைத்தார்.

இறுதியாக மே 1931 – ம் ஆண்டு புளோரன்ஸ் இத்தாலியில் நடந்த சர்வதேச காங்கிரஸ் மாநாட்டில் அக்டோபர் 4 – ம் நாளை உலக விலங்கு தினத்தை உலகளாவிய தினமாக மாற்ற தம் கருத்தை முன் மொழிந்தார்.

இக்கருத்து ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு பின் செயல்படுத்தப் பட்டது.

உலகில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கைக் தன்மையைப் பொறுத்தே ஒவ்வொரு இடத்தின் சூழலியல் மண்டலமும் இயங்குகிறது. விலங்குகள் மனிதனைப் பாதுகாத்து , மனிதனின் வாழ்வியல் சூழலுக்கு முக்கிய காரணியாக விளங்குகின்றன.

இயற்கையும், விலங்குகளும் ஒன்றோடொன்று இணைந்த சூழல்தான் , மனித வாழ்வை சிறப்பாக வழிநடத்த வகைசெய்கிறது.

இன்றைய நிலையில் மனிதர்கள், விலங்குகளுக்கு எந்த விதமான தீங்கும் செய்யாமல் இருத்தலே நலம். விலங்குகள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும்.

விலங்கினங்களைப்  பற்றியும்  வனங்களைப் பற்றியும்   அறிதல்  அவசியமாகின்றது.    நம்  நாட்டின்   மொத்தக்   காடுகளின்  பரப்பளவு    6 – இலட்சம்  சதுர  கிலோமீட்டர் ஆகும்.  இதில்  சுமார்   89, 450 – க்கும்   மேற்பட்ட  விலங்கு  இனங்கள்   வாழ்வதாக   கண்டறியப்பட்டுள்ளன.

இது  உலகில்  காணப்படுகின்ற விலங்கினங்களில்  7.3 % ஆகும்.  இவற்றில்   372- வகையான  பாலூட்டி  இனங்களும்,  1330 – வகையான  பறவையினங்களும், 399 – வகையான  ஊர்வன   இனங்களும், 60 —  ஆயிரம்    பூச்சி  இனங்களும் ,

181 — வகையான  நிலம்  மற்றும்  நீரில்  வாழும்   விலங்குகள்

1693 — மீன் இனங்களும்  உள்ளதாக  செய்திகள் தெரிவிக்கின்றன.

இதில்   8%   வன உயிரினங்கள்  இந்திய   நிலப்பரப்பில்   வாழ்வதாக    செய்திகள்  கூறுகின்றன. நாம்  வாழ  ,  விலங்குகள்   வாழ்வது  மிக   அவசியமாகின்றன.

விலங்குகளைப்  பாதுக்காப்பதன்  அவசியம் :

வனப்பகுதி  எங்கும்   விலங்குகள்    வாழ்வதால்  மண்ணின்  வளமும்  மக்களின் நலமும்  காக்கப்படுகிறது.

மக்களின்   பாதுகாப்புப்  பேணப்படுகிறது.  பேராசை கொண்ட  மனிதனால்   வனங்கள்  அழிக்கப்படும் போது  ,  வனத்தில்  வாழும்  விலங்குகள்   நகர்ப்புறம்  நாடி   உலா  வருகின்றன.

வனவிலங்குகள்   தொடர்பான   சட்டவிரோத  வர்த்தகம்   உலக  அளவில்  நடந்து  பல  விலங்கு களின்   அழிவிற்கு  காரணமாக  இருந்து   வருகின்றன. இயற்கைச் சமநிலையை  பாதுகாக்க  காட்டுயிரிகளின்  பங்கு  அளப்பரியது.

வனப் பாதுகாவலர்கள் :

வனத்தைப்  பாதுகாக்கும்  செயலில்   கம்பீரமாக  செயல்பட்டு   வனத்தின்  மரங்களையும்,  தாவர  விலங்குகளையும்   பாதுகாக்கும்  முதல்  காரணியாக  உள்ள  யானை,  புலி , சிங்கம்  போன்ற  உயிரினங்கள்   அழிவதுவனப்பாதுகாப்புக்கு   பெரும்  அச்சுறுத்தலாக  உள்ளது.

மனிதனின்  சுயநல   போக்கால்   அரிய  வகை   விலங்கினங்களும்  மரங்களும்   வெட்டி  கடத்தப்பட்டு வருகின்றன. மரங்கள்  விலங்குகளின்   இருப்பிடமாகவும்,  மறைவிடமாகவும்   உள்ளன.

இவற்றை   வெட்டிக்  கடத்தப்படுவது  வேதனைத் தரும்  செயல்கலாகத்   தொடர்கிறது. மரத்தை வெட்டுவது  மழைவளத்தைக்குறைப்பதற்கும்  ,  வனவிலங்கு அழிவிற்கும்  காரணமாக  இருந்து  வருகின்றன.

 

Kidhours – World Animal Day October 4 , World Animal Conservation Day October 4 ,World Animal Day October 4 Programmeb

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.