Latest Tamil Kids News Russia சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஆப்கானிஸ்தானுக்கு பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் கோதுமையை வழங்க ரஷ்யாவுடன் தாலிபான்கள் தற்காலிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக
![ரஷ்யாவுடன் கைக்கோர்த்த தலிபான் Latest Tamil Kids News Russia # World Best Tamil 1 Latest Tamil Kids News Russia சிறுவர்களுக்கான உலக செய்திகள்](https://www.kidhours.com/wp-content/uploads/2022/09/Untitled-design-2022-09-28T214246.283.jpg)
ஆப்கானிஸ்தானின் தற்காலிக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஹாஜி நூருதீன் அஜிசி(Haji Nooruddin Aziz) தெரிவித்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஆப்கானிஸ்தானின் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு தனது வர்த்தக பங்காளிகளை பல்வகைப்படுத்துவதற்காக செயற்பட்டு வருவதாகவும்,
ரஷ்யா தலிபான் நிர்வாகத்திற்கு சராசரி உலகளாவிய பொருட்களின் விலைக்கு தள்ளுபடி வழங்கியுள்ளதாகவும் ஆப்கானிஸ்தான் அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ரஷ்யா ஆப்கானிஸ்தானுக்கு ஆண்டுதோறும் 1 மில்லியன் தொன் பெட்ரோல், 1 மில்லியன் தொன் டீசல், 500,000 தொன் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய
வாயு (LPG) மற்றும் 2 மில்லியன் தொன் கோதுமை ஆகியவற்றை வழங்கும் என்றும் அதே ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.
இந்நிலையில் எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்குப் பொறுப்பான ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவாக்கின்(Alexander Novakin)
அலுவலகம் தொடர்புடைய எரிசக்தி மற்றும் விவசாய அமைச்சக ஒப்பந்தத்திற்கு பதிலளிக்கவில்லை என்று ஊடக அறிக்கை கூறுகிறது.
Kidhours – Latest Tamil Kids News Russia
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.