Tamil Kids News Thames River சிறுவர்களுக்கான உலக செய்திகள்
கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தில், தேம்ஸ் நதிக்கடியில் எக்கச்சக்கமான வெடிக்காத வெடிகுண்டுகள் இருப்பது போன்ற ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும்.
அவை வெடித்தால் சுனாமியே உருவாகி தண்ணீர் ஊருக்குள் புகுந்துவிடும் என்று அந்த படத்தில் சொல்லியிருப்பார் கமலஹாசன்.
தற்போது அந்த விடயம் குறித்த ஒரு திகிலை உருவாக்கும் செய்தி வெளியாகியுள்ளது.
இரண்டாம் உலகப்போர்க் காலகட்டத்தில் கட்டப்பட்ட SS Richard Montgomery என்ற கப்பல், 1944ஆம் ஆண்டு, ஆகத்து மாதம், தேம்ஸ் நதியில் பயணிக்கும்போது, பழுதாகிவிட்டதாம்.
அதை அங்கிருந்து அகற்ற எடுத்த முயற்சிகள் தோல்வியடைய, அதிலிருந்த சரக்குகளுடன் கப்பல் தண்ணீரில் மூழ்கிவிட்டதாம்.
மோசமான விடயம் என்னவென்றால், அந்தக் கப்பலில் 1,400 டன் எடையுள்ள வெடிகுண்டுகள் இருந்துள்ளன.
அந்த வெடிகுண்டுகளுடனேயே கப்பல் மூழ்கிவிட்டதாம்.
இப்போதும் அந்த வெடிக்காத குண்டுகள் அந்தக் கப்பலிலேயேதான் உள்ளன.
அந்த வெடிகுண்டுகள் வெடித்தால், அருகிலுள்ள Sheerness என்னும் துறைமுகமே நாசமாகிவிடுவதுடன், ஒரு சிறிய சுனாமி உருவாகி, தண்ணீர் ஊருக்குள் புகுந்துவிடும் அபாயம் உள்ளதாம்.
இந்நிலையில், தற்போது அந்தக் கப்பலில் இருந்து தண்ணீர் மட்டத்துக்கு வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் சில பாகங்களை வெட்டி அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
ஏனென்றால், அவை உடைந்து விழுந்து, அதனால் குண்டுகள் வெடித்துவிடக்கூடாது என்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாம்.
அகவே, ஆகத்து மாதம் முதல், நவம்பர் 15ஆம் திகதி வரை, அந்த பகுதியில் ட்ரோன்கள், சிறு விமானங்கள் உட்பட எந்த விடயமும் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Kidhours – Tamil Kids News Thames River
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.