Tamil Kids News France சிறுவர்களுக்கான உலக செய்திகள்
சட்டவிரோத குடியேற்றவாதிகள் 12,000 பேர் பிரான்சில் இருந்து வெளியேற்றப்பட்டதாக உள்துறை அமைச்சர் Gerald Darmanin அறிவித்துள்ளார்.
இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தில் இருந்து ஓகஸ்ட் மாத இறுதி வரை மொத்தமாக 12,708 பேர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களில் 7,627 பேர் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டனர்.
பிரான்சில் குடியேற்றம் தொடர்பாக புதிய நடைமுறைகள் கொண்டுவரப்பட்டதை அடுத்து, நாட்டில் இருந்து வெளியேற்றப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டின் இதே எட்டு மாத காலப்பகுதியில் 10,574 பேர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருந்தனர். அதனோடு ஒப்பிடுகையில் இவ்வருடத்தில் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 20% வீதத்தால் அதிகரித்துள்ளது.
வெளியேற்றப்பட்டவர்களில் அதிகமானோர் அல்ஜீரியா, லிபியா, மொரட்டானியா, மொராக்கோ மற்றும் துனிசியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் என உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.
kidhours – Tamil Kids News France
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.