Tamil Kids News Madeena சிறுவர்களுக்கான உலக செய்திகள்
இஸ்லாமியர்களின் புனித பூமியாக கருதப்படும் நகரங்களில் ஒன்று சவுதி அரேபியாவில் இருக்கும் மதீனா .

உலகில் உள்ள பழமையான நகரங்களில் ஒன்றாகும் இது. இஸ்லாமியப் பள்ளிவாசல் மஸ்ஜிதுன் நபவி இங்குதான் அமைந்து உள்ளது. இது இறைத்தூதர் நபிகள் நாயக்கத்தால் கட்டப்பட்ட முதல் பள்ளிவாசல் ஆகும்
இங்குதான் இறைத்தூதர் நபிகள் நாயக்கத்தின் சமாதியும் உள்ளது. அங்குதான் இவர் அடக்கம் செய்யப்பட்டு உள்ளார் என்பதால் வருடம்தோறும் பல லட்சம் இஸ்லாமியர்கள் இங்கு வருவது வழக்கம்.
இந்த நிலையில்தான் தற்போது சவுதி அரேபியாவின் மதீனாவில் புதிய தங்க இருப்புகள் கண்டுபிடிப்பட்டு உள்ளன.
பொருளாதார ரீதியாக சவுதி தற்போது கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற தொடங்கி உள்ளது. அவர்களிடம் கச்சா எண்ணெய் இருப்பு குறைய தொடங்கி உள்ளதால், அந்த நாடு சுற்றுலா துறை,
தங்க உற்பத்தி உள்ளிட்ட மற்ற துறைகளில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. முக்கியமாக சுற்றுலா துறையில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது
இந்த நிலையில்தான் மதீனா தோண்ட தோண்ட தங்கம் கிடைக்கும் கேஜிஎப் போன்ற சுரங்கம் ஒன்று அமைப்பதற்கான இடம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது,
சவுதி அரசின் அகழ்வாராய்ச்சி அமைப்பு மூலம் மதீனாவில் இருக்கும் அபா அல் ரஹா என்ற இடத்தில் தங்க இருப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக வெளியாகி உள்ள ரிப்போர்ட்களில், பூமிக்கு அடியில் மதீனாவில் பல இடங்களில் தங்கம் அதிக அளவில் இருக்கலாம். அதேபோல் தொழிற்சாலைகளுக்கு தேவையான காப்பர் மிக அதிக அளவில் இருக்கலாம்.
இந்த பகுதி பொக்கிஷம் போல தங்கம் மற்றும் காப்பர் வளங்களை அதிகம் கொண்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இங்கே அமைக்கப்படும் சுரங்கங்களில் வரும் காலங்களில் அள்ள அள்ள தங்கம் வரும் என்று எதிர்பார்க்கப்படுவது ரிப்போர்ட்களில் தெரிவிக்கப்பட்டு உள்ளது
இந்த இடங்களில் சுரங்கங்கள் அமைப்பதன் மூலம் 533 மில்லியன் முதலீடுகளை பெற முடியும். 4 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதோடு சுரங்க துறையில் சவுதி இதன் மூலம் புதிய உயரத்தை எட்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கிட்டத்தட்ட கேஜிப் படத்தில் வருவது போல அங்கு மிகப்பெரிய அளவில் வரும் நாட்களில் சுரங்கங்கள் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. சவுதியில் இதுவரை 5300 சுரங்கங்கள் அமைக்கப்பட்டு உள்ளன
இதில் இருந்து தங்கம் தொடங்கி வைரம் வரை பல விதமான தனிமங்கள், கனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. பல விதமான கற்கள், நிலக்கரிகள் கூட கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில்தான் தற்போது இந்த தங்க இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியா தற்போது விஷன் 2030 என்ற திட்டத்தோடு இயங்கி வருகிறது. இதற்கு நிறைய முதலீடுகள் தேவை.
கனிம துறையில் மட்டும் 32 பில்லியன் முதலீடுகள் தேவை. அதை பூர்த்தி செய்வதற்கு உதவும் வகையில் இந்த புதிய தங்க இருப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக சவுதி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
kidhours – Tamil Kids News Madeena , Tamil Kids News Madeena Update
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.