Today Tamil Kids News France Situation சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பிரான்ஸில் புதிய நடைமுறை ஒன்றை பரீட்சார்த்தம் செய்து பார்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலவச கடைகளைத் திறப்பது தொடர்பில் பிரான்ஸ் சோதனை முயற்சி ஒன்றை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
வழக்கமான சுப்பர் மார்க்கெட் போலவே வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கடைகளின் கொள்கை பண்டமாற்று மற்றும் மறுசுழற்சி என்பதாகும்.
இந்தக் கடைகளில், மக்கள் தங்களிடம் உள்ள பழைய பொருட்களைக் கொடுத்துவிட்டு, அதற்கு பதிலாக புதிய பொருட்களை பெற்றுச் செல்லலாம்.
அவ்வாறு எடுத்துக் கொள்ளப்படும் பொருட்களுக்கு எவ்வித கட்டணங்களையும் செலுத்த வேண்டிய அவசியமில்லை என தெரியவந்துள்ளது.
ஸ்மிக்வல் சந்தை என்று அழைக்கப்படும் இந்தக் கடைகளை பெரிய அளவில் திறக்கப்படவுள்ளன. தற்போது ஏழு சிறிய கடைகள் முதலில் திறக்கப்பட்டுள்ளது.
மேலும் மூன்று பெரிய கடைகளைத் திறக்கும் திட்டமும் உள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இவ்வாறான கடைகளில் உணவுப் பொருட்கள் எதுவும் கிடைக்காது. வீடுகளில் கைவிடப்பட்ட பொருட்கள் இறுதியில் கழிவு பொருட்களாக மாறுகின்றது.
இதனால் அவை குப்பைகளுக்கு செல்கின்றன. இந்த நிலையில் இவ்வாறான நடைமுறையை தவிர்க்க மக்களை ஊக்கப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, பழைய பொருட்கள் அல்லது உபயோகப்படுத்தாத பொருட்களை இவ்வாறு வீடுகளில் தேக்கி வைத்து குப்பைகளில் வீசுவதனை தவிர்ப்பதற்காக இந்த கடைகளை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
kidhours – Today Tamil Kids News France Situation
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.