Tamil Kids News Today சிறுவர்களுக்கான உலக செய்திகள்
சர்வதேச அளவில் பசி என்பது மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடித்துள்ளதாகவும் இதனை தீர்க்க தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் என்றும் உலக தலைவர்களுக்கு 200க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கடிதம் எழுதியுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் பசியால் மனிதர்கள் இறப்பதை தடுக்க இதை பற்றி ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
ஒவ்வொரு நான்கு வினாடிகளுக்கும் ஒருவர் பசியால் இறப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், 238 உள்ளூர் மற்றும் சர்வதேச அரசு நிறுவனங்கள் 77வது ஐ.நா பொதுச் சபையில் கூடியிருக்கும் தலைவர்களுக்கு உலகளாவிய பசியை முடிவுக்குக் கொண்டுவர உறுதியான நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுத்துள்ளனர்.
75 நாடுகளைச் சேர்ந்த தன்னார்வ அமைப்புகள் இக்கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளன.
345 மில்லியன் மக்கள் இப்போது கடுமையான பசியை அனுபவித்து வருகின்றனர், இது 2019 ஆம் ஆண்டிலிருந்து இருமடங்காக அதிகரித்துள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
21 ஆம் நூற்றாண்டில் மீண்டும் பஞ்சம் வரும் நிலை இருக்காது என்று உலகத் தலைவர்கள் வாக்குறுதி அளித்த போதிலும், சோமாலியாவில் பஞ்சம் மீண்டும் நெருங்கிவிட்டது.
உலகம் முழுவதும், 45 நாடுகளில் 50 மில்லியன் மக்கள் பட்டினியின் விளிம்பில் உள்ளனர் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
kidhours – Tamil Kids News Today
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.