Tamil Geography News Earthquake உலக காலநிலை
தாய்வானின் தென்கிழக்கு கடற்கரையில் இன்று 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது, இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் மதியம் 2:44 மணிக்கு (06:44 GMT) டைடுங் நகருக்கு வடக்கே 50 கிமீ (30 மைல்) தொலைவில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில் இரண்டு மாடி குடியிருப்பு கட்டிடம் மற்றும் ஒரு கடை இடிந்து விழுந்த நிலையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக உள்ளூர் ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது.
கிழக்கு தாய்வானில் உள்ள டோங்லி ரயில் நிலையத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததை அடுத்து, மூன்று பெட்டிகள் சேதமடைந்த்துள்ளன . நடுக்கத்தின் ஆரம்ப வலிமை 7.2-அளவு என அறிவிக்கப்பட்ட போதும் USGS பின்னர் அதை 6.9 ஆகக் குறைத்தது.
சனிக்கிழமையன்று 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அதே பகுதியைத் தாக்கியது மற்றும் ஞாயிற்றுக்கிழமை முதல் பல அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. தைவான் அருகே உள்ள தொலைதூர தீவுகளுக்கு ஜப்பான் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டது.
1 மீற்றர் (3 அடி) உயர அலைகள் மாலை 4:10 மணிக்கு (07:00 GMT) வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேசமயம் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் கடலோரப் பகுதியின் மையப்பகுதியிலிருந்து 300 கிமீ (190 மைல்) தொலைவில் அபாயகரமான சுனாமி அலைகள் வரக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த தீவுகள் டோக்கியோவிலிருந்து தென்மேற்கே சுமார் 2,000கிமீ (1,200 மைல்) தொலைவில் உள்ளன. இந்நிலையில் அந்த பகுதிகளில் வசிப்பவர்கள் கடற்கரையை விட்டு விலகி இருக்குமாறு வானிலை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
kidhours – Tamil Geography News Earthquake
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.