Tamil Kids Science News Artemis 1 பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
நாசா 1969ம் ஆண்டின் முதன்முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது.
இந்த நிலையில், மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புவதற்கான, ‘ஆர்டெமிஸ்’ திட்டத்தை நாசா துவங்கியுள்ளது.இந்த திட்டத்தின் கீழ், 2025ம் ஆண்டிற்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் முதல்கட்ட சோதனை முயற்சியாக, ஆர்ட்டெமிஸ்-1 ராக்கெட்டை கடந்த மாதம் 29-ம் திகதி அமெரிக்காவின் கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து விண்ணில் ஏவுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்தி போடப்பட்டது.
ராக்கெட்டின் 4 என்ஜின்களில் 3வது என்ஜின் செயலிழந்த நிலையில், ஏவுதல் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக நாசா அறிவித்தது.
நிலவுக்கு மனிதனை அனுப்பும் நாசா ஆர்டெமிஸ் திட்டத்தின் முதல் சோதனை முயற்சி, தொழில் நுட்பகோளாறு காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஆர்ட்டெமிஸ்-1 ராக்கெட்டை வரும் 23-ம் திகதி விண்ணில் ஏவ நாசா முடிவு செய்து, பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ராக்கெட் ஏவுதல் 3-வது முறையாக தாமதமாகும் என்றும், வருகிற 23-ம் திகதி ஆர்ட்டெமிஸ்-1 ராக்கெட் விண்ணில் ஏவப்பட வாய்ப்பு இல்லை என்றும் கூறிய நாசா, வரும் 27-ம் திகதி அன்று ராக்கெட்டை செலுத்த இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
kidhours – Tamil Kids Science News Artemis 1
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.