Tamil Kids History சிறுவர்களுக்கான உலக செய்திகள்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள புனித அகஸ்டின் நகரில் 19ம் நூற்றாண்டு கட்டப்பட்ட பெரிய வீட்டின் அடியில் பூர்வக்குடியினர் வாழ்ந்த ஒரு கிராமமே இருந்ததை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.
செயின்ட் அகஸ்டின் நகர தொல்பொருள் ஆய்வாளர் ஆண்ட்ரியா வைட் மற்றும் அவரது சகாக்கள், செயின்ட் அகஸ்டின் லிங்கன்வில்லி பகுதியில் உள்ள பத்தொன்பதாம் நூற்றாண்டு வீட்டின் கீழ்,
பூர்வீக அமெரிக்க கிராமமான பாலிகாவிலிருந்து மட்பாண்டங்கள் மற்றும் போஸ்ட்ஹோல்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
தரையிலிருந்து இரண்டு அடி உயரம் எழுப்பி இந்த வீடு கட்டப்பட்டிருந்தது. இதனால் அடியிலிருந்த பூர்வக்குடியினரின் ஆதிகிராமம் குறித்த சுவடுகள் சிதையாமல் இருந்துள்ளன.
மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட கழுதை அந்த இனத்தவரின் பண்ணை விலங்காக இருந்திருக்கக் கூடும் என்கிறார் ஆய்வாளர் ஒயிட்.
பிற்பாடு இங்கு எல்லாஹா தோட்டங்களின் ஒருபகுதியாக வணிகத்துக்காக ஆரஞ்சுப்பழங்கள் பயிர் செய்யப்படும் தோட்டமாக மாற்றப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த வீடு கடந்த சில மாதங்களில்தான் விற்கப்பட்டு, வேறு கட்டிடம் அங்கு எழுப்பட்டுள்ளது. இங்குதான் தொல்லியல் ஆய்வாளர்கள் நீண்ட காலம் ஆய்வு நடத்தி வந்தனர்.
இந்த வீட்டை மறுகட்டுமானம் செய்த போதும் தொல்லியல் தோண்டலிலும் ஆச்சரியங்கள் பல கிடைத்ததாக ஆண்ட்ரியா ஒயிட் கூறுகிறார்.
அப்போதுதான் அமெரிக்க பூர்வக்குடியினர் வாழ்ந்த பூர்விக கிராமமான பாலிகா என்ற ஒன்று இந்த இடத்தில் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். இந்த இடம் ‘1700ம் ஆண்டுகளில் ஒரே ஒரு முறை வரைபடத்தில் இருந்தது’ என்கிறார் ஒயிட்.
பிற்பாடு ஒயிட் உள்ளிட்ட தொல்லியலாளர்கள் பலவரைபடங்களை ஆராய்ந்து பாலிகா என்ற பூர்வக்குடியினத்தவர் வாழ்ந்த கிராமம், செயிண்ட் அகஸ்டின் நகரில் இருப்பதைக் கண்டுப்பிடித்தனர்.
இந்த வீட்டைக் கட்டும் முன் இங்கு பாலிகாவில் பூர்வீக அமெரிக்கர்கள் வாழ்ந்துள்ளனர். 1700-ம் ஆண்டுகளில் இங்கு கத்தோலிக்கத் திருப்பணி நடைபெற்று வந்தது. 1700களின் மத்திய ஆண்டுகளில் கைவிடப்பட்டது.
இதற்கு 50-100 ஆண்டுகள் சென்று இங்கு இந்த வீடு கட்டப்பட்டது. புளோரிடாவின் முதல் வர்த்தக ஆரஞ்சு தோட்டம் கொண்ட எல்லாஹா தோட்டமாக இது பிற்பாடு உருவானது.
இந்த வீடும் இந்த நிலமும் மறைந்த பூர்வக்குடியினர் வாழ்வியல் பற்றிய அதிசயங்களையும் ரகசியங்களையும் கொண்டிருப்பதாக தொல்லியலாளர் ஆண்ட்ரியா ஒயிட் கூறியுள்ளார்.
காப்ரியல் கார்சியா மார்க்வேஸ் எழுதிய, நூறாண்டு காலத் தனிமை’ என்ற மாபெரும் படைப்பில் வருவது போல் நூறாண்டுகாலத் தனிமை கொண்ட அழிந்து போன பூர்வக்குடி அமெரிக்க இனம் இங்கு வாழ்ந்ததைக் கண்டுப்பிடித்துள்ளனர்.
Kidhours – Tamil Kids History , Tamil Kids History update
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.