Tamil Kids News Kenya President சிறுவர்களுக்கான உலக செய்திகள்
கிழக்கு ஆப்பிரிக்க குடியரசு நாடான கென்யாவின் ஐந்தாவது அதிபராக வில்லியம் ரூட்டோ(William Ruto) பதவியேற்றார்.
அதிபர் தேர்தலில் 50.5 சதவீத வாக்குகளுடன் வில்லியம் ரூட்டோ(William Ruto) வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டாலும், அந்த முடிவை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் ரய்லா ஒடிங்கா(Raila Odinga) கென்யா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் கடந்த வாரம் அந்த மனுக்களை நிராகரித்ததைத் தொடர்ந்து, முன்னாள் துணை அதிபராக பதவி வகித்த வில்லியம் ரூட்டோ(William Ruto) அதிபராக பதவியேற்றுக் கொண்டார்.
கென்யாவின் அதிபராக இருந்து பதவி விலகும் உஹுரு மற்றும் துணை அதிபராக இருந்து அதிபராக பதவியேற்ற வில்லியம் ரூட்டோ (William Ruto) ஆகிய இருவரும், பதவியேற்பு விழாவில் கை குலுக்கி பேசிக் கொண்டனர்.
kidhours – Tamil Kids News Kenya President
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.