Saturday, September 21, 2024
Homeசிறுவர் செய்திகள்வாயை வைத்து கின்னஸ் சாதனை Tamil Kids News Ginners Record # World Best...

வாயை வைத்து கின்னஸ் சாதனை Tamil Kids News Ginners Record # World Best Tamil News

- Advertisement -

Tamil Kids News Ginners Record  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த சமந்தா ரம்ஸ்டேல்(Samantha Rumsdale) எனும் 21 வய­தான யுவதி, உலகின் மிகப் பெரிய வாயைக் கொண்டவராக காணப்படுகின்றார்.

Tamil Kids News Ginners Record  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Tamil Kids News Ginners Record  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இதற்­காக அவர் கின்னஸ் சாதனைப் புத்­த­கத்­திலும் இடம்­பெற்­றுள்ளார். இந்த அங்­கீ­கா­ரத்­துடன் சமூக வலைத்தள பிர­ப­ல­மா­கவும் சமந்தா ரம்ஸ்டேல்(Samantha Rumsdale) விளங்­கு­கிறார்.

- Advertisement -

32 லட்சம் பேர் அவரை சமூக வலைதளத்தில் பின்­தொ­டர்­கின்­றனர். அண்­மையில் அவர் பற்­சி­கிச்­சைக்­காக பற்­சி­கிச்சை நிலை­ய­மொன்­றுக்கு சென்றார். மிகப் பெரிய வாயைக் கொண்ட சமந்தா(Samantha Rumsdale) தமது பற்­சி­கிச்சை நிலை­யத்­துக்கு வரு­வதை அறிந்த ஊழி­யர்கள் பெரும் மகிழ்ச்­சி­ய­டைந்­தனர்.

- Advertisement -

இதனால், அவர்கள் செங்­கம்­பளம் விரித்து சமந்­தா­வுக்கு (Samantha Rumsdale)வர­வேற்று அளித்­தனர்.

அவ­ருக்கு சிகிச்சை அளிக்­கும்­போது, வாயை விரித்து வைத்­தி­ருப்­ப­தற்­காக பயன்­ப­டுத்­தப்­படும் சாதனம் தேவை­யே­ப­ட­வில்லை என மருத்­துவர் எல்க் சேயுங்(Elk Seung) தெரி­வித்­துள்ளார்.

பற்­சி­கிச்சை நிலை­யத்­துக்கு சென்­ற­போது பிடிக்­கப்­பட்ட வீடி­யோ­வையும் டிக்­டொக்கில் சமந்தா ரம்ஸ்டேல்(Samantha Rumsdale)வெளி­யிட்­டுள்ளார். இந்த வீடியோ 27 லட்சம் தட­வைகள் பார்­வை­யி­டப்­பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சமந்தா ரம்ஸ்டேல்(Samantha Rumsdale) வாயை முழு­மை­யாக திறந்தால் இரு உத­டு­க­ளுக்கும் இடை­யி­லான இடை­வெளி 6.56 சென்­ரி­மீற்­ற­ராக உள்­ளது. அவரின் வாயை அக­ல­மாக விரிக்கும் போது அதன் இரு முனை­க­ளுக்கு இடை­யி­லான நீளம் 10 சென்­ரி­மீற்­ற­ராக உள்­ளது.

அமெ­ரிக்­காவின் கெனக்­டிகட் மாநி­லத்தைச் சேர்ந்த சமந்தா ரம்ஸ்டேல் சிறிய வய­தி­லி­ருந்தே பெரிய வாயைக் கொண்­டி­ருந்தார். அவரின் குடும்­பத்தில் வேறு எவ­ருக்கும் இது போன்ற வாய் இல்லை.

பாட­சா­லையில் தனது பெரிய வாய் கார­ண­மாக தான் கேலிக்கு ஆளா­ன­தாக சமந்தா கூறு­கிறார். ஆரம்­பத்தில் தனது பெரிய வாய் குறித்து தான் கவ­லை­ய­டைந்த போதிலும் பின்னர் தான் அதை ஏற்றுக்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

‘எனது வாய் காரணமாக நான் இந்தளவு பிரபலமாகுவேன் என நான் எண்ணியிருக் கவில்லை’ எனவும் சமந்தா ரம்ஸ்டேல்(Samantha Rumsdale) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

kidhours – Tamil Kids News Ginners Record , Tamil Kids News Ginners Record update

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

ஆங்கிலம்

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.