Tamil Kids News Against Monarchy UK சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பிரித்தானியாவில் முடியாட்சியை ஒழிக்குமாறு கோரும் பதாகையை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்திய யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
ஸ்கொட்லாந்தின் எடின்பேர்க் நகரில் நேற்று முன்தினம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. டின்பேர்க் நகரில் 2 ஆம் எலிஸபெத்(Elizabeth) அரசியின் பூதவுடல் மக்கள் பார்வைக்கு வைக்கப்படவிருந்த தேவாலயத்துக்கு முன் மேற்படி யுவதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
22 வயதான யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அமைதிக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மரியாதையுடன் செயற்படுமாறு அப்பெண்ணிடம் கூட்டத்திலிருந்த மக்கள் கோரினர்.
எனினும், அவருக்கு ஆதரவாக ஒருவர் சத்தமிட்டார். ‘அவரை விட்டுவிடுங்கள். அது கருத்துச் சுதந்திரம்’ என அந்நபர் கூறினார் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, மன்னராக 3 ஆம் சார்லஸ்(Charles) உத்தியேகபூர்வமாக பிரகடனப்படுத்தும் வைபவம் நடைபெற்ற வேளையிலும், ஸ்கொட்லாந்தின் எடின்பேர்க் மாளிகைக்கு வெளியே மன்னர் 3 ஆம் சார்ள்ஸுக்கு(Charles) எதிராக கூச்சல்கள் எழுப்பப்பட்டன.
முடியாட்சிக்கு எதிரான நபர்களால் இக்கூச்சல்கள் எழுப்பப்பட்டுள்ளன. பிரிட்டனில் முடியாட்சி ஒழிக்கப்பட்டு குடியரசு ஏற்படுத்தப்பட வேண்டும் என ‘ரிபப்ளிக்’ எனும் அமைப்பு பல வருடங்களக வலியுறுத்தி வருகிறது.
இவ்வமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி கிரஹம் ஸ்மித் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ‘அரசியின் மறைவு தொடர்பில் மக்கள் பலரின் பிரதிபலிப்பை நாம் அங்கீகரிக்கிறோம்.
அதேவேளை மன்னர் சார்ளஸ்(Charles) அரியணை ஏறும் இத்தருணத்தில் முடியாட்சியின் எதிர்காலம் குறித்து பிரிட்டன் விவாதிக்க வேண்டியுள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார். “புதிய மன்னர் தொடர்பான பிரகடனம் ஜனநாயகத்தை அவமதிப்பதாகும்.
இறுதியாக அரியணை ஏறும் நிகழ்வு நடந்த 1952ஆம் ஆண்டின் பின்னர் பிரிட்டன் மிகவும் மாற்றமடைந்துவிட்டது.
இந்த ஜனநாயக சமூகத்தில் எமது அரசு தலைவர், விவாதம், அவரின் சட்டபூர்வ தன்மை குறித்த சவால் எதுவுமின்றி நேரடியாக அப்பதவிக்கு தெரிவாகுவதை ஏற்றுக்கொள்ள முடியாது’ எனவும் கிரஹம் ஸ்மித் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், கடந்த ஜூன் மாதம், 2 ஆம் எலிஸபெத் அரசியின் பவள விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில், 62 சதவீதமான பிரித்தானியர்கள் முடியாட்சி நீடிப்பதற்கு ஆதரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முடியாட்சிக்கு பதிலாக தெரிவு செய்யப்பட்ட அரச தலைவர் வேண்டும் என 22 சதவீதமானவர்கள் தெரிவித்திருந்தனர். 16 சதவீதமானோர் இது தொடர்பில் தமக்கு நிச்சயமில்லை எனக் கூறியிருந்தனர்.
kidhours – Tamil Kids News Against Monarchy UK , Tamil Kids News Against Monarchy UK Today , World Best Tamil Magazine
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.