Tamil Kids News Turtles சிறுவர்களுக்கான உலக செய்திகள்
கடந்த 30 ஆண்டுகளில் 11 லட்சம் கடல் ஆமைகள் சட்டவிரோதமாக கொல்லப்பட்டதாக சர்வதேச ஆய்வு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இயற்கை வளங்களை மனித இனம் சுரண்டுவதால் பூமியின் இயற்கை சமநிலையில் மாற்றம் ஏற்பட்டு அழிவு பாதைக்கு கொண்டு சேர்ப்பதாக சூழலியல் ஆர்வலர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
காடுகள், மலைகள் போன்ற இயற்கை வளங்களை அழிப்பதோடு மட்டுமல்லாது விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்களை வேட்டையாடி அவற்றை அழித்தொழிப்பதை பல்வேறு ஆய்வுகள் அம்பலப்படுத்தியுள்ளன.
குறிப்பாக கடந்த 100 ஆண்டுகளில் இது போன்ற சுரண்டல்களின் அளவானது பல்கி பெருகியுள்ளது.
பூமியின் முக்கிய உயிரினமான கடல் ஆமைகள் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வேட்டையாடும் நிகழ்வுகள் அதிகம் காணப்படும் நிலையில், இது குறித்த விரிவான ஆய்வு தகவலை குளோபல் சேஞ்ச் பயாலஜி என்ற இதழ் வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வு கட்டுரையை அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சி பேராசிரியர் ஜெச்சி சென்கோ சக ஆய்வாளர்களின் துணையுடன் எழுதியுள்ளார். இந்த ஆய்வின் படி 1990 தொடங்கி 2020 வரை 30 ஆண்டு காலத்தில் சுமார் 11 லட்சம் கடல் ஆமைகள் வேட்டையாடப்பட்டு சட்டவிரோதமாக கொல்லப்பட்டுள்ளது.
சுமார் 65 நாடுகளில் இந்த சட்டவிரோத ஆமை கடத்தலானது நிகழ்ந்து வருகிறது. பூமியில் உள்ள 58 முக்கிய ஆமை இனங்களில் 44 இனங்கள் இந்த ஆபத்தை எதிர்கொண்டு வருகின்றன.
ஆமை கடத்தலுக்கு எதிராக கடும் சட்டங்களை சர்வதேச நாடுகள் விதித்திருந்தாலும் இந்த சட்டவிரோத செயல் தொடர்ந்து வருகிறது. ஆண்டுதோறும் இந்த கடத்தல் தொழில் மூலம் சுமார் 23 பில்லியன் டாலர் மதிப்பில் வர்த்தகம் நடைபெறுகிறது.
990 முதல் 2010 வரை இந்த கடத்தல் எண்ணிக்கை மிக அதிகம் இருந்துள்ளது. பின்னர் சட்டங்கள் விழிப்புணர்வு நடவடிக்கை மூலம் கடந்த 10 ஆண்டுகளில் இந்த நடவடிக்கைகள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது என ஆய்வு கூறுகிறது.
kidhours – Tamil Kids News Turtles
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.