Tamil Kids News France சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பிரான்ஸின் பல நகரங்களில் இரவு வேளையில் பொது இடங்களில் மின்சார விளக்குகளை ஏற்றுவதற்கு தடை விதிக்கும் நடைமுறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன் முதற்கட்டமாக லில் (Lille) நகரிலுள்ள இரண்டு நினைவு சதுக்கங்களை தவிர்த்து ஏனை பொது கட்டடங்களில் விளக்குகள் ஏற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒப்ரா மற்றும் பிரதான பகுதிகளை தவிர்த்து நகரத்தில் ஏனைய பகுதிகளிலுள்ள விளக்குகளை இரவில் அணைத்து வைப்போம் என மேயர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நடவடிக்கை நகரத்தின் எரிசக்தி சேமிப்பு திட்டத்தின் முதல் அறிவிப்பு எனவும் முழுத் திட்டம் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் எனவும் அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நீர் மின்சார நுகர்வையும் குறைக்கும் முயற்சியின் மற்றுமொரு பகுதியான நகரத்தில் அழகிற்காக அமைக்கப்பட்டுள்ள நீருற்றுகளில் செல்லும் நீரினை கட்டுப்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேயரின் தகவலுக்கமைய, அமுல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் நகரத்தின் வருடாந்திர மின்சார நுகர்வில் 170,000 கிலோ வோட் மின்சாரத்திற்கு மேல் சேமிக்க முடியும் என தெரியவந்துள்ளது.
தெரு விளக்குகள் தொடர்ந்து எரியும்
அதற்கமைய, செப்டம்பர் மாதம் 5ஆம் திங்கள் முதல் பொது கட்டிட விளக்குகள் அணைக்கப்படும் என்றும் , ஆனால் தெரு விளக்குகள் தொடர்ந்து எரியும் என குறிப்பிடப்படுகின்றது.
இந்த ஆண்டில் குளிர்காலத்திற்கு முன்னதாக, நாட்டின் எரிவாயு மற்றும் மின்சார விநியோகம், பற்றாக்குறை ஆபத்து உட்பட பல விடயங்கள் தொடர்பில் மதிப்பாய்வு செய்து பதிலளிக்க அமைக்கப்பட்டுள்ள எரிசக்தி பாதுகாப்பு சபையின் முதல் கூட்டத்தை ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூட்டியபோது மேயரின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
மேலும் இந்த திட்டத்தினை ஏனைய நகரங்களிலும் அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.
kidhours – Tamil Kids News France
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.