Tamil Kids News Latvia பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்கு பதிலடியாக ரிகாவில் இருந்த சோவியத் கால நினைவுச்சின்னத்தை லாட்வியா அகற்றியுள்ளது.
ரிகாவில் உள்ள 79-மீட்டர் (259-அடி) இரண்டாம் உலகப் போர் நினைவுச்சின்னம் இடிப்பு இயந்திரங்களைப் பயன்படுத்தி வீழ்த்தப்பட்டது.
எஸ்டோனியா, லிதுவேனியா போன்று லாட்வியா, ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து உக்ரைனுக்கு ஆதரவை தெரிவித்து வருகிறது. அதனால் ரஷியாவின் செயல்பாடுகளை எதிர்த்து ஒருங்கிணைந்த சோவித் பிரதேசமாக இருந்த போது உருவாக்கப்பட்ட சின்னங்களை அகற்றி வருகிறது.
லாட்வியன் பாராளுமன்றம், நவம்பர் நடுப்பகுதிக்குள் மீதமுள்ள அனைத்து சோவியத் சிலைகள், கல்வெட்டுகள் மற்றும் நினைவுச்சின்னங்களை அகற்ற முடிவெடுத்துள்ளது.
பால்டிக் நாடுகளான எஸ்டோனியா, லாட்வியா மற்றும் லிதுவேனியாவும் உக்ரைன் மீதான படையெடுப்பு தொடர்பாக 10 ரஷ்ய தூதர்களை வெளியேற்றுவதாக அறிவித்தது.
Šodien, 25. augustā, situācija Uzvaras parkā esošā obeliska demontāžas laikā vērtējama kā mierīga un bez būtiskiem starpgadījumiem. Ir fiksēti atsevišķi pārkāpumi, kuri ātri novērsti. Aizturētas četras personas. Plašāk lasiet: https://t.co/IZCZsHH3UO
*VP video no notikuma vietas: pic.twitter.com/ZvDNqfJ3h0— Valsts policija (@Valsts_policija) August 25, 2022
முன்னதாக 1997 இல் சோவியத் நினைவுச்சின்னத்தை இடிக்கும் முயற்சி நடந்தது, ஆர்வலர்கள் குழு டைனமைட்டைப் பயன்படுத்தி அதை வீழ்த்த முயன்றது. அந்த நேரத்தில் இரண்டு உயிரிழப்புகள் ஏற்பட்டதால் நினைவுச்சின்னங்களை அகற்றும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.
அதன் முதற்கட்டமாக இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் நாஜி படைக்கு எதிராக போரிட்டு சோவியத் வெற்றியின் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுச்சின்னத்தின் மையப் பகுதியாக இருந்த சோவியத் நட்சத்திரங்களால் மேலே அமைக்கப்பட்ட கான்கிரீட் தூபி லாட்வியாவின் தலைநகரில் வியாழக்கிழமை அகற்றப்பட்டது.
இந்த நினைவுச்சின்னம் 1985 இல் கட்டப்பட்டது, லாட்வியா இன்னும் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1991 இல் லாட்வியா மீண்டும் சுதந்திரம் பெற்று, இறுதியில் நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினராக ஆனதில் இருந்து இதுசர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ட்விட்டரில், லாட்வியாவின் வெளியுறவு மந்திரி நினைவுச்சின்னத்தை அகற்றுவதன் மூலம், லாட்வியா “வரலாற்றின் மற்றொரு வலிமிகுந்த பக்கத்தை மூடிவிட்டு சிறந்த எதிர்காலத்தைத் தேடுகிறது” என்று கூறினார்.
லாட்வியாவின் பாராளுமன்றம் மே மாதம் விக்டரி பார்க் நினைவுச்சின்னம் இடிப்புக்கு ஒப்புதல் அளித்தது. மேலும் ரிகா நகர சபையும் அதை உறுதிசெய்தது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு சிலைகளை அகற்றும் பணி தொடங்கியது.
பின்னர் அந்த பகுதி சுற்றி வளைக்கப்பட்டு சேதங்கள் ஏற்படும் இடங்களில் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தியது.அதிகாரிகள் ட்ரோன்கள் பறக்க தடை விதித்தனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக வியாழக்கிழமை பூங்கா அருகே போக்குவரத்தை போலீசார் தற்காலிகமாக மூடிவிட்டு பெரிய இயந்திரங்கள் கொண்டு இடித்துத் தகர்க்கப்பட்டது.
kidhours – Tamil Kids News Latvia, Tamil Kids News Latvia cemetery
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.