Today Tamil Kids News India சிறுவர்களுக்கான உலக செய்திகள்
டிஜிட்டல் பொருளாதாரம் என்கிற முறையில் இந்தியாவில் அதற்கு அதிக வாய்ப்புகள் காத்திருக்கிறது. அதே போன்று, உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் பொருளாதாரமாக மாற இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளது என்றும் மாஸ்டர்கார்டு குளோபல் சிஇஓ மைக்கேல் மீபேக் தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனத்தில் பொறுப்பேற்ற பிறகு இந்தியாவிற்கு தனது முதல் வருகையை மேற்கொண்டிருந்த மீபேக், கட்டண முறைகளின் எதிர்காலம் மற்றும் இந்தியாவில் அவர் பார்க்கும் வாய்ப்புகள் உட்பட பல தலைப்புகள் குறித்து பேசினார்.
அவரின் உரையில், “இன்று டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் இந்தியாவில் அது எவ்வாறு வளர்ந்து வருகிறது என்பதை தான் நான் பார்த்து வருகிறேன். மேலும் UPI-இன் வளர்ச்சி விகிதங்கள் மற்றும் பலவற்றைப் பார்க்கும்போது, இந்தியாவில்
தொழில்நுட்பம் அளவு பல மடங்கு உயர்ந்துள்ளது” என்று தெரிவித்து கொண்டார். அதே போன்று “தொழில்நுட்ப நிறுவனமாகவும், தொழில்நுட்ப அறிஞராகவும் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்,” என்றும் தெரிவித்து கொண்டார்.
மாஸ்டர்கார்டு தலைமை நிர்வாக அதிகாரி, இந்தியாவில் தனது நிறுவனத்தின் வளர்ச்சி லட்சியங்களுடன் ஒத்துப்போகும் கட்டண மாதிரிகள் குறித்து தான் விரிவாக உணர்வதாகவும் கூறினார்.
மேலும், இந்தியாவில் இந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் ஃபின்டெக் மற்றும் பிற நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து, மாஸ்டர்கார்டு தனது வணிகத்தை மேம்படுத்துவதற்கு வேறு என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி சிந்திக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்து கொண்டார்.
அதே போன்று, அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்த 100 மில்லியன் மக்கள் இணைய வாய்ப்புள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
kidhours – Today Tamil Kids News India
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.