Tamil Kids News Dinosaur சிறுவர்களுக்கான உலக செய்திகள்
வட சீனாவில் அதிக எண்ணிக்கையிலான டைனோசர் கால்தட புதைபடிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சவுத் சீனா மார்னிங் போஸ்ட்டில் வெளியாகியுள்ள தகவல்களின் படி, ஆராய்ச்சியாளர்கள் 4,300க்கும் மேற்பட்ட டைனோசர் கால்தடங்களைச் சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள ஹெபெய் மாகாணத்தில் உள்ள ஜாங்ஜியாகோவில் கண்டுபிடித்துள்ளனர்.
அவை 9,000 சதுர மீட்டர் அளவிலான கால்தடங்கள். ஜுராசிக் மற்றும் கிரெட்டேசியஸ் காலங்களுக்கு இடையில் அல்லது சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் 2020ம் ஆண்டில் தான், கால் பாதத்தின் இம்ப்ரெஷன்களை உள்ளடக்கிய புதை படிவ கால்தடங்கள் முதலில் கண்டுபிடிக்கப்பட்டன. அதற்குப் பின்னதாக தற்போது இப்படியொரு அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
டைனோசர்கள் நடந்த வேகம், அவற்றின் நீளம் மற்றும் எடையுடன் சேர்ந்து, பாத தடத்திலிருந்து கண்டறிய முடியும் எனச் சீனா டெய்லி என்ற இதழில் தெரிவித்துள்ளது.
சீனா புவி அறிவியல் பல்கலைக்கழகத்தின் டைனோசர் நிபுணர் ஜிங் லிடா சீனா டெய்லியிடம் அளித்த பேட்டியில், “கால்தடங்கள் டைனோசர்களின் வாழ்க்கை பழக்கம் மற்றும் நடத்தையைப் பிரதிபலிப்பது மட்டுமல்லாமல், அந்த நேரத்தில் டைனோசர்களுக்கும் அவற்றின் வாழ்க்கைச் சூழலுக்கும் இடையிலான தொடர்புகளையும் காட்டுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
சீனாவின் வடபகுதியில் கண்டறியப்பட்டுள்ள கால்தடங்கள் நான்கு தனித்துவமான டைனோசர் இனங்களைச் சார்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். புதைபடிமங்களில் ஒன்று இன்னும் அடையாளம் காணப்படாத ஒரு இனத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று நிபுணர்கள் ஊகித்துள்ளனர்.
கண்டுபிடிக்கப்பட்ட கால்தடங்கள் தாவர மற்றும் மாமிச டைனோசர்களுக்கு சொந்தமானது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மாமிச உண்ணிகளின் கால் அளவு சிறியதாக இருக்கும் என்றும், அதன் அளவு நான்கு முதல் ஐந்து மீட்டர்கள் மட்டுமே இருக்கும் என்றும் கூறியுள்ளனர். அதேசமயம் தாவர உண்ணி டைனோசர்களின் கால்தடம் கிட்டத்தட்ட 15 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்பகுதி இப்போது உயரமான, பாறைகள் நிறைந்த புல்வெளியாக மாறியிருந்தாலும், டைனோசர்களின் காலத்தில் ஏராளமான நீர் மற்றும் மரங்கள் இருந்ததால், இப்பகுதி டைனோசர்களை ஈர்த்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
பெய்ஜிங்கின் சீனாவின் புவி அறிவியல் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் ஜிங் லிடா, இந்த பாறை அடுக்கு ஜுராசிக் மற்றும் கிரெட்டேசியஸ் காலங்களுக்கு இடையில் உருவாக்கப்பட்டது என்றும், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கால் தடங்கள் மிகவும் பெரியதாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். விஞ்ஞானிகள் கால்தடங்களின் 3D இமேஜ் மற்றும் அவற்றின் அச்சுக்களை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் டைனோசர் புதைப்படிவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவில், 2014ல், ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
kidhours – Tamil Kids News Dinosaur , Tamil Kids News Dinosaur update
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.