Monday, September 23, 2024
Homeசிறுவர் செய்திகள்ஜெர்மனியின் சுற்றுலா நடைமுறைகள் # Tamil Kids News German # German Best Tamil...

ஜெர்மனியின் சுற்றுலா நடைமுறைகள் # Tamil Kids News German # German Best Tamil News

- Advertisement -

Tamil Kids News German சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

ஜேர்மனிக்கு சுற்றுலா செல்ல விரும்புவோர் முன்கூட்டியே அந்நாட்டைக் குறித்த சில விடயங்களை அறிந்துவைத்துக்கொள்வது நல்லது.

விதிகளைப் பின்பற்றி நடத்தல் மகிழ்ச்சியான சுற்றுலாவுக்கு உதவியாக இருக்கும்.

- Advertisement -

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான விதிகள் இருக்கும். குறிப்பாக சுற்றுலா செல்வோர் அந்நாட்டு விதிகளை அறிந்துவைத்திருப்பது, தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்க உதவலாம்.

- Advertisement -

அவ்வகையில், வெளிநாட்டவர்கள் ஜேர்மனிக்கு சுற்றுலா சென்றால் என்னென்ன விடயங்களை அறிந்துவைத்திருக்கவேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

 

Tamil Kids News German சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Tamil Kids News German சிறுவர்களுக்கான உலக செய்திகள்

 

பயணச் சீட்டு விடயத்தைப் பொருத்தவரை, நகரம், புறநகர்ப்பகுதி, மெட்ரோபோலிட்டன் பகுதி என வெவ்வேறு பகுதிகளுக்கேற்ப வெவ்வேறு விதமாக அமைந்துள்ள பயணச்சீட்டு முறை சுற்றுலாப்பயணிகளை குழப்பக்கூடியதாக அமையலாம். ஆகவே, உள்ளூர் போக்குவரத்து குறித்த வரைபடம் ஒன்றைப் பார்த்து அதற்கேற்ப உங்களுக்கு என்ன டிக்கெட் தேவை என்பதை அறிந்துகொள்ளலாம்.

சில நேரங்களில் சுற்றுலாப்பயணிகளுக்கான சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்படும் அவற்றின் மீது கொஞ்சம் கவனம் வைத்துக்கொள்வது மிகவும் உதவியாக இருக்கும்.

ஜேர்மனிக்குச் சுற்றுலா வரும் முன், தேவையான அளவுக்கு கையில் பணம் (அல்லது ஏடிஎம் அட்டை) வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் பல இடங்களில் நீங்கள் பணம் கரன்சியாக செலுத்தவேண்டியிருக்கும்.

கட்டாயம் உள்ளூர் விலைவாசி குறித்து தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள்

அதாவது ஜேர்மனியைப் பொருத்தவரை, சில பொருட்களின் விலைகள் மாகாணத்துக்கு மாகாணமும், சொல்லப்போனால் ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொரு விதமாகவும் மாறக்கூடும்.

நீங்கள் உங்கள் ரயில் பயணத்துக்கான டிக்கெட்டை பயணம் செய்யும் தினத்தன்று வாங்குவீர்களானால் அது அதிக செலவு பிடிக்கக்கூடியதாக இருக்கும். ஆகவே, சில வாரங்களுக்கு முன்பாகவே டிக்கெட் வாங்கிவைத்துக்கொண்டால் டிக்கெட் குறைவான விலைக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது.

ஜேர்மானியர்கள் பன்றி இறைச்சியையும் உருளைக்கிழங்கையும் விரும்பி உண்ணக்கூடியவர்கள். ஆகவே, நீங்கள் சைவ உணவு உண்ணுபவராக இருந்தால் துருக்கி மற்றும் வியட்நாம் உணவகங்களுக்குச் செல்லலாம்.

அங்கே உங்களுக்கு இறைச்சி மற்றும் பால் கலக்காத உணவு வகைகள் கிடைக்கலாம்.

பல இடங்களில் ஞாயிற்றுக்கிழமைகள் கடைகள் இருக்காது. பல சுற்றுலாத்தலங்களும் இயங்காது என்பதை கவனத்தில் கொள்வது நல்லது. ஆக, ஷாப்பிங் செல்வோர் சனிக்கிழமை ஷாப்பிங்கை முடித்துக்கொள்வது நல்லது.

விதிமுறைகள்

நீங்கள் இருக்கும் மாகாணத்தின் கோவிட் விதிகளை அறிந்துவைத்துக்கோள்வது நல்லது. ஏனென்றால், பல ஐரோப்பிய நாடுகள் கோவிட் விதிகளை நீக்கிவிட்டாலும், ஜேர்மன் மாகாணங்கள் சில, இன்னமும் சில விதிகளைக் கடைப்பிடிக்கின்றன. முக்கியமாக மாஸ்கை மறக்காதீர்கள்.

ஜேர்மனியில் பெரியவர்கள் சிறியவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். ஆகவே, சிவப்பு விளக்கு எரியும்போது சாலையைக் கடப்பது போன்ற தவறுகளை செய்யாதீர்கள், அது சட்டப்படி குற்றம்.

பெரும்பாலான இடங்களில், குறிப்பாக கட்டிடங்களுக்குள் புகைபிடிக்க அனுமதி கிடையாது என்பதை கவனத்தில் கொள்வது நல்லது!

 

kidhours – Tamil Kids News German , Tamil Kids News German tour , Tamil Kids News German visit

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.