Sunday, January 19, 2025
Homeகல்வி70 ஒளவையார் பொன்மொழிகள்

70 ஒளவையார் பொன்மொழிகள்

- Advertisement -

avvaiyaar_ஒளவையார்
1. தென்னை மரம் இளநீர் தருவது போல நல்லவருக்குச் செய்த உதவி பலமடங்கு நண்மையை தரும்..
2. மனிதன் வருமானத்திற்கு ஏற்ப செலவிட வேண்டும்.
3. பெரியோர் இருக்கும் இடத்தில் பேசும் போது நம் வாதங்களை  முகத்தில் அடித்தால் போல் நிதானம் இழந்து கூறுவதை தவிர்க்க வேண்டும்.
4. நினைத்தப்பொருள் ஒன்றாகவும், கிடைக்கும் பொருள் வேறாக அமைவதும், அவ்வாறு இல்லாமல் நினைத்தப்பொருளே கிடைப்பதும், நினையாத ஒன்று நாம் எதிர்பாராத நிலையில் கிடைப்பதும் நம் வாழ்வில் நிகழ்கின்றன. இவை எல்லம் நம்மை ஆளும் இறைவனின் செயலே ஆகும்.
5. பிறவூயிர்களைப் பாதுகாப்பதே சிறந்த வீரமாகும்.
6. பிறருடைய உடைமைகளை குறிப்பாக நிலங்களை ஏமாற்றியோ அல்லது பலவந்தப்படுத்தியோ பறித்து அனுபவிப்பது பெரும் பாவச்செயலாகும்.
7. வேதம் முதலான மறை நூல்களை படிப்பதைக்காட்டிலும் ஒழுக்கத்தோடும், தூய்மையான உள்ளத்தோடும் இருப்பதே நல்லவர்களின் பண்பாகும்.
8. பேற்ற தாய்தந்தையரைப் பேணி பாதுகாப்பதும்இ சரியான தருனத்தில் நமக்குப் பிறர் செய்த நல்ல செயல்களை ஒருபோதும் மறக்காமல் நன்றியுடையவர்களாக இருப்பதும் நல்லவர்களின் அடையாலமாகும்.
9. நல்லவர்களைக்காண்பதுஇ அவர் சொல் கேட்பது, அவர்களோடு உறவாடுது எல்லாம் வாழ்வை உயர்த்தும்.
10. வெள்ளை மனம் கொண்டோருக்கு, சிவந்த தாமரைமலரில் உறையும் திருமகளின் அருள் கிடைக்கும்.
11. மன எழுச்சியைப்பெற அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்வது சரியான வழிமுறையாகும்.
12. தீயனவற்றைக் காப்பாற்றக் கூடாது, அவை அழிவுக்கு காரணமானதாகும். நல்லனவற்றைக் காத்தல் நம்மையூம் ஒரு பொருட்டாக உலகம் மதிக்க வழி ஏற்படுத்தித்தரும்.
13. இன்பம் வருவது போல் தோன்றும் பழக்கவழக்கங்களுக்கு இடம் தரக்கூடாது. அப்படிச்செய்தால் இன்பம் உன்னை வந்து சேராது.
14. நாம் எவ்விதக் கைமாறும் கருதாமல் பிறருக்கு உதவி செய்ய வேண்டும். அந்த உதவி வீண் போகாது. இதன் பலன் பெரிய அளவில் நமக்குக் கிடைக்கும் என்பது உறுதி.
15. நல்ல செயல்களை நீயே முன் நின்று செய்வதுடன், மனம் அறிய உண்மையாக வாழிவதே நேர்மையான வாழ்கை.
16. முறையான பயிற்சியினால் சித்திரம் வரையப் பழக்கலாம். நாவின் பயிற்சியால் செந்தமிழ் பேச முடியும். மனப்பயிற்சியால் கல்வியில் தேர்ச்சிபெறலாம். ஆனால், நண்பர்களிடம் உண்மையான நட்புடன் பழகுதல், உயிர் இரக்கம் காட்டுதல், இல்லாதவர்களுக்கு கொடுத்து மகிழ்தல் ஆகிய நற்குணங்கள் ஒருவனுக்கு பிறவியிலேயே அமையவேண்டும்.
17. நீதிநூல்களில் கடிந்து விளக்கப்பட்ட விஷயங்களை நாமும் வாழ்வில் ஒதுக்கப்படுவது நல்லது. கடுஞ்சொற்கள் பேசுவதை அறவே தவிர்க்க வேண்டும்.
18. துன்பம் நம்மை அடுக்கடுக்காக வந்து தாக்கினாலும், மனந்தளராமல் ஊக்கத்தோடு செயல்படுபவனிடம் செல்வம் சேர்ந்து விடும்.
19. நல்லோருக்குச் செய்த உதவி கல்மேல் பொறித்த எழுத்தாக நிலைத்திருக்கும். தீயோருக்குச் செய்த உதவி நீர் மேல் எழுதிய எழுத்தாக சுவடு தெரியாமல் அப்போதே அழிந்துவிடும்.

- Advertisement -

avvaiyaar_ஒளவையார்

20. பாலைக் காய்ச்சினாலும் சுவை குறைவதில்லை. அதுபோல  நல்லவர்கள் வறுமையிலும் நேர்மை இழப்பதில்லை.
21. கோடி பணம் கொடுத்தாவது நல்லோர் உறவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
22. பயனில்லாத பொருட்களை நாம் துக்கி எறிவது போல்  பயனற்றவர்களின் அன்பையூம் உதறி தல்லுவதே அறிவுடைமை.
23. ஒருவர் பலமுறை கூறிஇ அதன் பின் செயலை செய்து முடிப்பது பண்பாகாது. தானே தனது கடமையைச் செய்ய வேண்டும்.
24. கணவனைக் காத்தல், வீட்டைக்காத்தல், அறத்தைக்காத்தல், அன்பைக்காத்தல் என நல்லனவற்றைக்காப்பதே பெண்ணுக்கு அழகு.
25. இயற்கைக்கு மாறுபட்ட செயல்களை என்றும் செய்ய முனையக்கூடாது. உலக நடைமுறைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்வதில்லை என்று உறுதி எடுங்கள்.
26. நல்ல நுல்கள் கூறும் கருத்துக்களையும், பெரியோர்கள் கூறும் அறிவூறைகளையும் உள்ளத்தில் வைத்துக்காத்தல் வேண்டும்.
27. கடவுள் உனக்குக் கொடுத்திருக்கும் சக்தியை அறிந்துக்கொள். அறிந்து முயற்சி செய்தால் அறம் செய்ய முடியும். சக்தி இல்லை என்று நினைப்பது தவறு.
28. கற்க வேண்டிய நூல்களைக் கற்று உனது அறியாமையை நீக்கிக்கொள், அதேபோல் நல்ல நூல்களைக் கற்பதிலிருந்து விலகக்கூடாது.
29. நாம் கற்ற விஷயங்கள் வெறும் கைப்பிடி மட்டுமே. இன்னும் கற்கவேண்டிய விஷயங்கள். இந்த பரந்த பூமியைப்போல எவ்வளவோ இருக்கின்றன. ஆதனால் படித்துவிட்டோம் என்ற இறுமாப்பு கூடவே கூடாது.
30. உள்ளத்தை அலைப்பாய விடாமல் ஒரு நிலைப்படுத்தி அவற்றை அடிமையாக்குவதே வீரம். அழியாத கல்வியே நிலையான செல்வம். பிறருக்கு அடிiயாகாமல் சுயமாக சம்பாதித்து உண்பதே உயர்ந்தது.
31. அறம் என்பது இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுதலாகும். பொருள் என்பது நேர்மையான முறையில் நியாயமாக சம்பாதிப்பதாகும். இன்பம் என்பது உண்மை அன்பில் கருத்தொருமித்து தம்பதியராய் வாழ்வதாகும். வீடு என்பது இம் மூன்றையும் மறந்து கடவுளைச் சிந்திப்பதாகும்.
32. பட்டினியாக இருப்பதை விட பிறவுயிர்களுக்கு தீங்கு எண்ணாமல் வாழ்வதே சிறந்த அறமாகும்.
33. வேதம் முதலான மறைநூல்ளைப் படிப்பதை காட்டிலும் ஒழுக்கத்தோடும் துய்மையான உள்ளத்தோடும் இருப்பதே நல்லவர்களின் பண்பாகும்.
34. நல்லவர்களை நேரில் காண்பதும், அவர்களின் அறிவுரைக்கேட்பதும், அவர்களோடு இணைந்து பழகுவதும், அவர்த்தம் நற்குணங்களை புகழ்து பேசுவதும் நமக்கு நன்மை தரும் செயலாகும்.
35. கல் பிளவு பட்டால் மீண்டும் ஒன்று சேராது. அதுபோல, கடுமையான கோபத்தால் பிளவுப்பட்ட கீழ்மக்கள் மீண்டும் ஒன்றுசேர மாட்டார்கள். நீரில் உண்டான பிளவு அங்த நிமிஷமே ஒன்று கூடிவிடுவதைப்போல, அறிவில் சிறந்தவர்களின் கோபமானது. தோன்றிய அந்த வேலையிலேயே மறைந்துவிடும்.
36. வானத்திலிருந்து பெய்யும் பருவமழை குறைந்து விட்டால் உலகில் தானதர்மங்களும் குறைந்துவிடும்.
37. சந்தனம் எவ்வளவு தேய்த்தாலும் தன் நறுமணத்தினையே பிறருக்கு கொடுக்கும். அதுபோல நல்லவர்கள் வறுமையடைந்தாலும் தன் நற்குணத்தில் இருந்து மாறுவதில்லை.
38. தாமரை இலைமேல் தண்ணீர் போல, உடம்பின் மீது உள்ள பற்றுக்களை குறைத்துக் கொண்டு வாழுங்கள்.

- Advertisement -

39. ஆண்டுகள் பலவாக அழுது நம்மை நாமே வருத்திக் கொண்டாலும் மாண்டவர்கள் மீண்டும் வரப்போவதில்லை. காலம் ஓடிக்கொண்டிருகிறது. இறப்பு நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அதனால்இ உங்களால் முடிந்த நன்மைகளை பிறருக்குச் செய்யுங்கள்.
40. ஒருவர் உயர் கல்வி கற்றாலோ, சழுகத்தில் உரிய பொறுப்பில் இருந்தாலோ அவரிடம் கோபப்படும் குணம் இருக்குமானால் அவர் கற்ற கல்வியும், சமூக நற்பெயரும் அந்த நொடியிலேயே அழிந்து அனாதையாக நிற்கும் உணர்வு ஏற்படுகின்றது.
41. அல்லி, நெய்தல் மலர்கள் நீர் வற்றிய காலத்திலும் குளத்தை விட்டு நீங்காமல் இருப்பது போல வறுமை வந்த போதும் உண்மையான உறவினர்கள் நம்மை விட்டு அகல மாட்டார்கள்.
42. உள்களை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்களோ அதே அளவிற்கு பிறர் மீதும் நேசம் காட்டுங்கள். அவர்கள் உங்களை விட எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்பதை புரிந்துக்கொல்லுங்கள்.
43. இறைவனுடைய மகிமை பற்றியும் அவனுடைய படைப்பின் அதிசயங்கள் பற்றியும் கூறும் நூல்களையே அடிக்கடி பயிலுங்கள்.
44. பரமனின் திருவடிகளில் தன்னை உண்மையாகச் சமர்பித்த ஒருவன் தன் வருங்கால வாழ்வுப்பற்றிக் கவலை கொள்ள வேண்டியதில்லை. காரணம் பரமனின் கையில் தான் எல்லாமே உள்ளது. இது பற்றி துளி அளவு கவலை கொண்டாலும், அவனது சரணாகதி பொருளற்றதாகும்.
45. ஒருவன் எவ்வளவு அறிவுடையவனாக இருந்தாலும்இ இறைவன், ஆசிரியர் ஆகியோருக்கு தொண்டு செய்யாமல் அவர்களை இகழ்ந்து மதிக்காமல் திரிந்தால் அவன் அழிந்துப்போவது நிச்சயம்.
46. சிறந்த அடியோர்களாகிய நல்லோரிடம் சேருவதே அழியாத இன்பத்திற்கு வாசலாகும். ஆதனால் அடியவர்களின் உள்ளம் மகிழும் படி நல்ல முறையில் நடந்துக்கொள்ள வேண்டும்.
47. எப்போதும் பிறர் மீது குற்றம் குறை கண்டுப்பிடிக்கும் குணமுடையவர்களிடம் பேசக்கூடாது. வயிறு வளர்ப்பதை மட்டுமே குறிக்கோலாக கொண்டிருக்கும் கீழ் மக்களிடம் பழகுதல் கூடாது.
48. பக்தர்களை எப்பதும் புகழ்ந்து பணிவிடை செய்துக்கொண்டே இருக்க வேண்டும். பக்தி மார்க்கத்தை தவிர வேறு எதையும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. புனித ஆழ்வார்களின் திவ்ய பாசுரங்களை நாள்தோறும் படிப்பது நல்லது.
49. ஒரு கடவுளை வணங்குவது நல்லது. பலதெய்வங்களை வணங்குதல் கூடாது. அது கடவுளை அவமதிப்பது ஆகும். நீ விரும்பும் கடவுளின் மீது உன் மனதை செலுத்துவது நல்லது.
50. கொக்கு சிறிய மீன்களை ஓட விட்டு, பெரிய மீன்கள் வரும் வரை காத்திருந்து பிடிக்கும். அதுப்போல அறிவுடைய சல்லவர்கள். ஒரு செயலில் வெற்றிப்பெற தகுந்த நேரம் வரும்வரை அமைதியாக காத்திருப்பர்.
51. நீர் வற்றிய காலத்தில் பறவைகள் குளத்தை விட்டு ஓடிவிடும். அதுப்போல ஒருவன் செல்வத்தை இழந்த காலத்தில் உதவாமல் ஓடும் உறவினர்கள் உண்மையானவர்கள் அல்ல.
52. வருமானத்திற்கு தகுந்தப்படி செலவு செய்ய வேண்டும். அதிக செலவு செய்பவன் மானத்தை இழப்பான். திருடன் என்னும். பெயர் பெறுவான். பாவத்தைச் செய்து அழிவான். மற்றவர்களால் பழிக்கப்படுவான்.

- Advertisement -

53. பசி என்னும் பாவி ஒருவனை பீடித்துவிட்டால் தன்மானம் குடிப்பெருமை, கல்வி, வளமை, அறிவு, கொடை, தவம் உயர்வு, ஊக்கம், காதல் என்னும் பத்து குணங்களும் இருந்த இடம் தெரியாமல் ஒருவனை விட்டு விலகிவிடும்.
54. மற்ற செல்வங்கள் எல்லாம் நம்மை விட்டு விலகினாலும் அழியாத செல்வமாக நம்மிடமே நிலைத்து நிற்கும் செல்வம் கல்விச்செல்வம் மட்டுமே.
55. துன்பம் நம்மை அடுக்கடுக்காக வந்து தாக்கினாலும், மனந்தளராமல் ஊக்கத்தோடு செயல்படுபவனிடம் செல்வம் சேர்ந்து விடும்.
56. துய்மையான உள்ளத்தில் வஞ்சக எண்ணங்களுக்கு சிறிதும் இடம் கிடையாது.
57. உலகில் இரண்டு ஜாதியினரே இருக்கிறார்கள். ஒன்று ஆண் மற்றொன்று பெண்.
58. உங்கள் மனம் தௌpந்த நீரைப்போல இருப்பதற்கு முதலில் கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள்.
59. உரக்கத்தில் வாழும் காலத்தில்இ உள்ளங்கள் நண்பர் யார்  பகைவர் யார் என்பதை விவேகத்துடன் அறிந்து கொள்ளுங்கள்.
60. பெரிதாக மடல் கொண்ட தாழைக்கு மணம் இல்லை. ஆனால் சிறிய இதல்களைக்கொண்டிருந்தாலும் மகிழம் புவிற்கு நிறைய மணம் உண்டு. கடலில் நிறைய நீர் இருந்தும் குடிப்பதற்கு பயன்படாது. கடல் அருகே மணற் குழியில் சுரக்கும் ஊற்றுநீர் சிறிதாக இருந்தாலும் உண்பதற்கு பயன்படும்.
61. நோய்கள் உடலோடு பிறந்தே இவ்வுடலை அழிக்கிறது. அதுபோல  உடன் பிறந்தவர்களும் நமக்கு தீங்கு செய்யலாம். எங்கோ மலையில் இருக்கும் மூலிகை நோயைப்போக்குவது போல நமக்கு உறவில்லாமல் எங்கோ ஓரிடத்தில் பிறந்தவர்கள் கூட நமக்கு உதவி செய்வதும் உண்டு.
62. நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் வறுமை நிலை அடைந்தாலும், தன் மேன்மையான தன்மையை விட்டுக்கொடுக்காமல் தன்னால் ஆன உதவியை பிறருக்குச் செய்வார்கள்.
63. யாரிடமும் கோபம் கொண்டு  சண்டைப்போடாதீர்கள். சண்டையிட்டுக்கொண்டிருந்தால் மனதில் நிம்மதி கெடுவதை தவிர  பயன் ஏதும் ஏற்படுவதில்லை. பண்பட்ட மனம் உடையவர்கள் யாரிடமும் சண்டையிடுவதில்லை. அவர்கள் கோபப்படும் விதமாக எதேனும் நிகழ்ந்தாலும் கூட அமைதியாக இருந்துவிடுவார்கள்.
64. கோபம்  மனதில் பல தீய எண்ணங்கள் தோன்றுவதற்கு காரணமாக இருக்கிறது. பொறாமை, வஞ்சகம் ஒழுக்கமின்மை போன்ற பல தீய குணங்களையும் உண்டாக்கி விடுகிறது. எனவே கோபத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்.
65. மனிதர்களுக்கு எற்படும் துன்பமானது வெளியில் எங்கிருந்தோ வருவதில்லை. அவரவர் நடந்துக்கொல்லும் விதத்திற்கேற்ப அவரட்களுக்கு திரும்ப்கிடைக்கிறது. பிறரை பழிப்பதபலும் நமக்கு துன்பம் வரும். ஆகவே பழிச்சொல்லை விட்டு அனைவரிடமும் பரிவுடன் நடந்துக்கொள்ள வேண்டும். அத்தகையவர்கள் இறைவனால் விரும்பப்டுவார்.
66. பழமையபன பெரிய ஆசாரியர்களிள் நம்பிக்கை கொள்ளுங்கள். உலக இன்பங்களில் ஒரு பொழுதும் அடிமையாகாதீர்கள். உலக ஞானத்தைக் கொண்டு களிப்படையாதீர்கள்.
67. இறைவன் தொண்டினையும்  அடியவர்களின் தொண்டினையும், ஆசிரியரின் தொண்டினையும் சமநிலையில் கருதிச்செய்ய வேண்டும். முன்னோர்கள் கூரியிருக்கும் தெய்வீகமான நில்களில் நம்பிக்கை வைக்க வேண்டும்.
68. வெறும் புற ஒழுக்கங்களும், ஆச்சாரங்களும் மட்டுமே ஆண்டவயை அடைய போதுமானதில்லை. உண்மையான அடியார்களை ஒருபோதும் ஒருமையில் அழைப்பது கூடாது.
69. இறைவனை மகிழ்விப்பதை விட  அவன் அடியார்களை மகிழ்விப்பது சிறந்தது. இறைவனிடம் செய்யும் குற்றங்களை காட்டிலும் அடியவர்களிடம் செய்யும் குற்றங்கள் மிகவும் கொடியது ஆகும்.
70. இழிசெயல் புரிபவர்கள், ஏளனம் செய்பவ்கள், இறையடியார்களை நிந்திப்பவர்கள், புலித்தோல் போர்த்திய கபடதாரிள், குருவை திட்டும் கயவர்கள், ஆகியோரை கண்ணால் கூட பார்க்கக்கூடாது.
71. ஒருவனுடைய பிறப்பைப பற்றியோ எண்ணாமல் அவனுடைய கொள்கைகளைப் பின்பற்றி பணிவிடை செய்வது சிறந்தது. கடவுளுக்கு எதை நீ அர்பணிக்கிறாயோ அது மிகவூம் புனிதமானது. நீ கடவுளிடம் சரனாகதி அடையும் போது உன் பாவங்கள் நீங்குகின்றன. முற்றவர்களை அவமதிப்பது மிக கொடிய செயலாகும்.
72. இறைவனுக்கு அர்ப்பணிக்காத உணவு, உடை, பூக்கள், சந்தனம், வெற்றிலை பாக்கு, பானம் எதையும் ஏற்றுக்கொல்லக்கூடாது. எப்பொருளையும் மானசீகமாக கடவூளுக்கு சமர்ப்பித்து விட்டு எடுத்துக் கொள்வது நல்லது. நற்பிறப்பாளர் உயர்ந்த வாழ்க்கையுடையவர்கள் ஆகியோபரிடம் இருந்து பெறும் உணவு மட்டுமே உண்பதற்கு தகுந்ததாகும்.
73. நற்குணமுடையவர்கள், அறிவாளிகள்,தர்ம சிந்தனை உடையவர்கள் ஆகியோர்களைக்கண்டால் பணிந்து வணங்க வேண்டும். இன்பம், துன்பம் இரண்டையும் சமமாக பாவிக்க வேண்டும். தொண்டு செய்தவன் முலமே கடவுலை அடைய முடியும். என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.