Monday, March 3, 2025
Homeசிறுவர் செய்திகள்அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன்#46 us president

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன்#46 us president

- Advertisement -

அமெரிக்காவின் 45-வது அதிபராக ஜனவரி 20 ஆம் நாள் பதவியேற்ற பின்னர், அதன் மகிழ்ச்சியை தன்னுடைய ஆதரவாளர்களுடன் டிரம்ப் கொண்டாடினார்.

- Advertisement -

முதலில் டிரம்ப் அமெரிக்காவின் முதல் பெண்மணியான தன்னுடைய மனைவியோடு நடனமாடியதை தொடர்ந்து, துணை அதிபராக பதவியேற்று கொண்ட மைக்கேல் பென்ஸூம், டிரம்பின் குடும்பத்தினரும் அடுத்தடுத்து அந்த நடனத்தில் இணைந்து ஆடி மகிழ்ந்தனர்.அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரீசும் இன்று பதவியேற்கின்றனர். நாடாளுமன்றத்தின் வெளியே இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது. தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் ஜோ பைடனுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.தமது பிரியா விடை நிகழ்ச்சியின் போது ராணுவ அணிவகுப்பு நடத்த வேண்டும் என டொனால்டு டிரம்ப் கேட்டுக் கொண்டிருந்த நிலையில், அமெரிக்க ராணுவம் அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறது. பைடனின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை என ஏற்கனவே தெரிவித்துள்ள டிரம்ப், இன்று புளோரிடாவுக்கு புறப்பட்டு செல்கிறார்.

புதிய அதிபர் பதவியேற்பு விழாவை முன்னிட்டு, வாஷிங்டன் உட்பட அனைத்து மாகாணங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் விர்ஜீனியா மாகாணத்தின் ரிச்மோன்ட் நகரில், டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள் ஆயுதங்களுடன் பேரணி நடத்தினர். Black Panthers இயக்கத்தினரும், அரசுக்கு எதிரான அமைப்பினரும் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.
அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக, வாஷிங்டன் நகரில் வெள்ளை மாளிகை, நாடாளுமன்ற கட்டடம் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான அனுமதி அட்டை உள்ளவர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என பாதுகாப்பு படை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.அண்மையில் வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் காரில் சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ள சூழலில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -
45_us_president_janathipath
45_us_president_janathipath

இதனிடையே, அமெரிக்காவின் புதிய அரசாங்கத்திற்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், பைடன் அரசுக்கு அதிர்ஷடமும் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் பொறுப்பில் இருந்து விடைபெறும் டொனால்ட் டிரம்ப், 19 நிமிடத்திற்கு பிரியாவிடை உரையை பேசியுள்ளார். அதில், நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், இந்த வன்முறையை சகித்துக் கொள்ள முடியாது என்று கூறினார்.மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி திரும்புவதற்காக கொண்டுவரப்பட்ட ஆபிரகாம் ஒப்பந்தம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் சீனாவை எதிர்கொண்டது ஆகிய நடவடிக்கைகளை, தமது ஆட்சியின் சாதனைகளாக டிரம்ப் குறிப்பிட்டார்.

- Advertisement -
45_us_president_janathipathi
45_us_president_janathipath

மேலும், தமது ஆட்சிக்காலத்தில் புதிய போர்களை தொடங்காத அதிபர் தாம் எனவும் பெருமிதம் தெரிவித்தார். புதிய அரசாங்கத்தின் வெற்றிக்காக தாம் பிரார்த்திப்பதாக குறிப்பிட்ட டிரம்ப், அமெரிக்கா பாதுகாப்புடனும், வளமானதாகவும் இருக்கவேண்டும் என்று வாழ்த்து தெரிவித்தார்.அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவிருக்கும் ஜோ பைடனுக்கு, தான் வசித்து வந்த டெலவெர் நகரத்தில் பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய அவர், தான் எப்போதும் டெலவெரின் பெருமைக்குரிய மண்ணின் மைந்தன் என்று குறிப்பிட்டார். தான் இறக்கும் போது, தனது நெஞ்சத்தில் டெலவெர் என்று தான் எழுதியிருக்கும் என்று உணர்ச்சிப்பூர்வமான குரலில் ஜோ பைடன் பேசினார். இதனைதொடர்ந்து தலைநகர் வாஷிங்டனிற்கு அவர் புறப்பட்டார்.

 

******************************

kidhours_upcoming

#kids songs,#kids health,#siruvar neram,kids songs,siruvar seithigal,siruvar vilaiyattu,siruvar kalvi, world tamil news,tamil first news,tamils,raasi palan,tamil cinema,new tamil movies,vijay sethupathi movies,latest tamil movies,action tamil movie,new tamil movies 2020,new tamil movies released,tamil new film,film tamil,online movies tamil,tamil,english to tamil,english to tamil translation,tamil translation,english to tamil dictionary,tamil typing,hindi to tamil,english to tamil typing
english to tamil sentence translation online,google tamil typing,tamil dictionary,hindi to,tamil translation,tamil to english translator app,sinhala to tamil,tamil to english translation sentences,jothidam,tamil jathagam,tamil jathagam online,daily thanthi jothidam
nadi jothidam,josiyam in tamil,tamil jathagam online free,tamil jothidam online
online josiyam tamil,kulanthai pirappu jothidam in tamil

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.