Saturday, January 18, 2025
Homeகல்விவிஞ்ஞானம்17,300 ஆண்டுகளுக்கு முன்பு பாறையில் வரையப்பட்ட கங்காரு! வியப்பில் ஆராய்ச்சியாளர்கள் : வைரலாகும் புகைப்படம்

17,300 ஆண்டுகளுக்கு முன்பு பாறையில் வரையப்பட்ட கங்காரு! வியப்பில் ஆராய்ச்சியாளர்கள் : வைரலாகும் புகைப்படம்

- Advertisement -
paleontologie-art-parietal-kangourou-australie1-kidhours
paleontologie-art-parietal-kangourou-australie1-kidhours

மிகவும் பழமையான ராக் ஆர்ட்டை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

- Advertisement -

பாறையில் வரையப்பட்ட கங்காரு, ஒற்றை மனிதன் போன்ற சித்திரங்கள் மற்றும் அதில் படர்ந்திருந்த குளவி கூடு சுமார் 17,300 ஆண்டுகள் பழமையான ஓவியம் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

kangaroo-old-art-kidhours
kangaroo-old-art-kidhours

சுமார் 2 மீட்டரில் (அதாவது 6.5 அடி) வரையப்பட்டுள்ள கங்காரு ஓவியங்கள் மற்றும் பல ஓவியங்கள் கிம்பர்லியில் உள்ள ஒரு பாறை குகை போன்ற தங்குமிடத்தின் மேற்பரப்பில் இருண்ட மல்பெரி வண்ணப்பூச்சில் சித்தரிக்கப்பட்டுள்ளன.

- Advertisement -

தற்போது, மேற்கு ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி பிராந்தியத்தில் உள்ள இந்த குகை பகுதி ட்ரைஸ்டேல் நதி தேசிய பூங்காவாக பராமரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இவை பழங்குடி பாறை ஓவியங்களுக்கு பெயர் பெற்றது.

- Advertisement -
ancient-kangaroo-art-kidhours
ancient-kangaroo-art-kidhours

இந்த பூங்காவின் பாரம்பரிய உரிமையாளர்களும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் இணைந்து “இயற்கையான” பாறை கலையின் வயதைக் கணக்கிட்டுள்ளனர்.

அதன் மூலம் இந்த ஓவியங்கள் பாலங்கர்ரா மக்களின் முன்னோர்களால் வரையப்பட்டது என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ரேடியோ கார்பன்-டேட்டிங்கை பயன்படுத்தி பண்டைய மண் குளவி கூடுகளால் அதன் வயது தீர்மானிக்கப்பட்டது. இந்த கண்டுபிடிப்புகள் நேச்சர் ஹ்யூமன் பிஹேவியர் இதழில் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.

paleontologie-art-parietal-kangourou-australie-kidhours
paleontologie-art-parietal-kangourou-australie-kidhours

அதோல், குளவி கூடுகளை நம்பியிருக்கும் கார்பன்-டேட்டிங் என்ற ஒரு புதுமையான நுட்பத்தைப் பயன்படுத்தி ஓவியங்களைத் தேட முடிந்தது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மண் குளவிகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக குகையில் வசித்து வருவதால், ஆராய்ச்சிக்குழு ரேடியோகார்பன் டேட்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுமார் 27 கூடுகளின் வயதைக் கண்டறிந்து அதன் மூலம் சுமார் 16-க்கும் மேற்பட்ட ஓவியங்களின் வயதை கண்டறிந்துள்ளனர்.

kangaroo-kidhours
kangaroo-kidhours

பாறையில் கண்டுபிடிக்கப்பட்ட பண்டைய குளவி கூடுகளின் புஷ்ஃபயர்ஸில் இருந்து கரி மூலக்கூறு கண்டுபிடிக்கப்பட்டது.

அதே போல தாவர மற்றும் விலங்கு பொருட்களின் துண்டுகள் இருந்தன. இவை அனைத்தும் தேதியிடக்கூடிய கார்பனைக் கொண்டிருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வரையப்பட்டுள்ள பெரிய கங்காருவுக்கு மேலேயும் கீழேயும் கூடுகள் இருந்ததால், அது எப்போது வரையப்பட்டது என்பதற்காக கால அளவை எங்களால் கணக்கிட முடிந்தது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.