வாட்ஸ்ஆப்பில் புதிய விதிகளும் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் புதிய விதிமுறைகளை கொடுத்துள்ளது அந்த விதி முறைகள் பற்றி தற்போது பார்க்கலாம்.
பயனாளர்களின் தகவல்கள் மற்றும் பண பரிவர்த்தனை என அனைத்தும் வாட்ஸ்ஆப்பால் சேகரிக்கப்படும்.
மேலும் வாட்ஸ் அப் பயனர் செல்போனை எவ்வுளவு நேரம் பயன்படுத்துகின்றார் எங்கெல்லாம் செல்கின்றார் என்பதை வாட்ஸ் அப் இனி வெளிப்படையாக கண்காணிக்கும்.
இதன் மூலம் வாட்ஸ் அப் பயனபடுத்தும் நபர் பண பரிவர்த்தனை எங்கு , எவற்றுக்கு நடத்துகிறார் என்பதையும் வாட்ஸ் ஆப் கண்டுபிடிக்கும்.
வாட்ஸ்ஆப்பில் நாம் அனுப்பும் தகவல்கள் 30 நாட்களுக்கு அதன் சர்வர்களில் சேமித்து வைக்கப்படும்.
பயனாளர்கள் குறித்த விவரங்களை சேகரித்து பேஸ்புக் வாயிலாக பிற தொழில் நிறுவனங்களுக்கு வழங்குவதும் இதன் பின்னணியில் உள்ளதாக கூறப்படுகிறது.
வாட்ஸ்ஆப்பின் ஒவ்வொரு பயனாளரின் விவரங்களையும், நடமாட்டத்தையும் பின்தொடர்ந்து அதன் வாயிலாக பணத்தை சம்பாதிப்பது தான் பேஸ்புக்கின் திட்டம்.
இந்தியாவில் மட்டும் 20 கோடி பேர் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்துகின்றனர். இந்த 20 கோடி பேரின விவரங்களையும் வர்த்தக நிறுவனங்களுக்கு இனி வாட்ஸ் அப் கொடுக்கும்.
இந்த நிறுவனங்கள் அதற்கு ஏற்றவாறு விளம்பரங்களை வடிவமைத்து மக்களை கவரும். இதே பாணியை தான் ஏற்கனவே பேஸ்புக்கும் பின்பற்றி வருகிறது.
நிபந்தனைகள் மாற்றம் குறித்த அறிவிப்பு வாட்ஸ்ஆப் செயலியில் தொடர்ந்து வருகிறது.
புதிய நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டால் தொடர்ந்து வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தலாம். நிபந்தனைகளை ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அந்த நபரின் வாட்ஸ்ஆப் கணக்கு நீக்கப்படும்.
புதிய நிபந்தனைகளை ஒப்புக்கொள்ளாதவர்கள் பிப்ரவரி 8 க்கு மேல் வாட்ஸ்ஆப்பினை பயன்படுத்த முடியாது