Sunday, January 19, 2025
Homeசிறுவர் செய்திகள்உலகத்தையே உலுக்கிய புகைப்படம்.... இறக்கும் தருவாயில் 7 மாத தங்கையை காப்பாற்றிய 5 வயது சிறுமி!

உலகத்தையே உலுக்கிய புகைப்படம்…. இறக்கும் தருவாயில் 7 மாத தங்கையை காப்பாற்றிய 5 வயது சிறுமி!

- Advertisement -

சிரியாவில் தான் இறக்கும் தருவாயில் தனது 7 மாத தங்கையை காப்பாற்றிய 5 வயது சிறுமியின் செயல் புகைப்படமாக வெளியாகி காண்பவர்களின் கண்களை கண்ணீர் மல்க வைத்துள்ளது.

- Advertisement -

சிரியாவில் அரசுப் படைகளும் கிளர்ச்சியாளர்களும் கடும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இட்லிப் மாகாணத்திலுள்ள அரிஹா என்ற பகுதியில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப்படைகள் வான்வழி தாக்குதல் நடத்தியதில் அப்பகுதியில் இருந்த 5 மாடிக்கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது.

அப்போது, அம்ஜத்அல் அப்துல்லா என்பவரது வீடும் நொறுங்கியது மட்டுமின்றி, அவரது மனைவி ஆஸ்மாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

- Advertisement -

அப்போது இடிபாடுகளில் சிக்கிக்கொண்டிருந்த 5 வயது மகள் ரிஹாம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சமயத்தில் கூட தனது தங்கை கீழே விழுந்துவிடக்கூடாது என்று அவரது சட்டையைக் இறுக்கமாக பிடித்துக் கொண்டுள்ளார்.

- Advertisement -

குறித்த 7 மாத குழந்தை தனது அக்காவின் செயலால் கீழே விழாமல் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியுள்ளது. தற்போது செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருகின்றது. தனது தங்கையின் உயிரைக் காப்பாற்றிவிட்டு கடைசியில் பரிதாபமாக உயிரிழந்தார் ரிஹாம். தங்கையைக் காப்பாற்ற 5 வயது சிறுமியின் புகைப்படம் தற்போது அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

girl-child-protect-her-sister-kidhours
girl-child-protect-her-sister-kidhours

 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.