- Advertisement -
ஐம்பால்
ஐம்பால் என்றால் என்னவென்று
ஐயம் தெளிய கற்போமே
அவன் என்று சொன்னால் ஆண் பாலாம்
அவள் என்று சொன்னால் பெண்பாலாம்
அவனையும் அவளையும் சேர்த்தாலே
அவர்கள் என்று ஆகிடுமே
அதுவே பலர்பால் என்போமே
அது என்று சொன்னால் ஒன்றன்பாலே
அவை என்று சொன்னால் பலவின்பாலே
ஆண்பால் பெண்பால் பலர்பாலுடன்,
ஒன்றன்பால் பலவின்பாலுமே
சேர்ந்தால் ஐம்பால் ஆகிடுமே!
- Advertisement -