Friday, November 22, 2024
Homeகல்விகட்டுரைகட்டுரைகள் - இந்திய வளர்ச்சியில் அப்துல்கலாம்...!

கட்டுரைகள் – இந்திய வளர்ச்சியில் அப்துல்கலாம்…!

- Advertisement -

அப்துல் கலாம் சென்னை தொழில் நுட்பக் கல்வி நிறுவனத்தில் (எம்ஐடி) பட்டப்படிப்பு முடித்தார். பின்னர் பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஏரோநாட்டிகல் மேம்பாட்டு பிரிவில் விஞ்ஞானியாக சேர்ந்தார். அப்போது துவக்கத்தில் சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்துக்காக அவர் வடிவமைத்து அளித்தார். விஞ்ஞானி விக்ரம் சாராபாயின்கீழ் இயங்கி வந்த இன்காஸ்பர் குழுவில் பணி புரிந்தார்.

- Advertisement -
kalam-missileman-kidhours
kalam-missileman-kidhours

கடந்த 1969ல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கைக்கோள் ஏவும் திட்டத்தின் திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டார். எல்எல்வி-3 மூலம் ரோகினி செயற்கைக்கோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு, 1980 ஜூலையில் புவிச்சுற்று பாதையில் விண்வெளியில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.

 

- Advertisement -

1965ம் ஆண்டு பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பில் கலாம் தனித்து பணியாற்றினார். இஸ்ரோவில் பணிபுரிந்தது கலாம் வாழ்வின் மிகப்பெரிய சாதனையாக இருந்தது.

- Advertisement -
apj-kalam-katturai-kidhours
President Dr. APJ Abdul Kalam addressed the Nation on the eve of his demitting the office of the President of India from Rashtrapati Bhavan on July 24, 2007. RB Photo

1970ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரை பிஎஸ்எல்வி, எஸ்எல்வி-3 திட்டங்களில் பணியாற்றினார். இந்த திட்டங்கள் வெற்றிகரமாக முடிந்தன. நாட்டின் முதல் அணு ஆயுத சோதனையான சிரிக்கும் புத்தர் திட்டத்துக்கு ராஜா ராமண்ணாவால் டிபிஆர்எல் பிரதிநிதியாக அழைக்கப்பட்டார். 1970 எல்எல்வி ராக்கெட் மூலம் ரோகினி 1 ஏவப்பட்டது இஸ்ரோவின் சாதனையாகும்.

 

அமைச்சரவை ஒப்புதல் இல்லாவிட்டாலும், கலாம் தலைமையிலான விண்வெளி திட்டங்களுக்கு பிரதமர் இந்திரா காந்தி தனது தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி ரகசிய நிதி ஒதுக்கினார். அக்னி ஏவுகணை, பிருத்வி ஏவுகணை உட்பட பல ஏவுகணைகளை உருவாக்கும் திட்டங்களில் கலாமின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது.

கலாம் 1992ம் ஆண்டு ஜூலையில் இருந்து 1999 டிசம்பர் மாதம் பிரதமருடைய தலைமை அறிவியல் ஆலோசகராகவும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் செயலாளராக பணியாற்றினார். அப்போது, பொக்ரான்-2 அணு ஆயுத சோதனையில் தனது சிறந்த பங்களிப்பை அளித்தார்.

 

1998ம் ஆண்டு, இதயம் சார்ந்த மருத்துவரான டாக்டர் சோம ராஜுவுடன் சேர்ந்து குறைந்த செலவிலான கரோனரி ஸ்டென்ட்-ஐ கலாம் உருவாக்கினார். கிராமப்புறங்களில் உள்ள சுகாதார வழிமுறைக்காக 2012ம் ஆண்டில் இவர்கள் வடிவமைத்த டேப்லெட் கம்ப்யூட்டருக்கு ‘கலாம், ராஜூ டேப்லெட்’ என்று பெயர் சூட்டப்பட்டது.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.