இங்கிலாந்தில் பெல்லா என்று பெயர் கொண்ட புயல் கடுமையாக தாக்கியதில் கடல் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்த கனமழையால் கிரேட் ஓயுஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
நார்த் பெட்போர்ட்ஷையர், நார்த் ஹாம்ப்டன், நார்ஃபோல்க் மற்றும் ஸஃபோல்க் ஆகிய பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
இதனையடுத்து அப்பகுதியில் இருந்த ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
மீட்பு படையினர் தீவிர நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட நகர வாசிகள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.